தமிழை பொறுத்தவரை இதுவரை பிக்பாஸ் 5 சீசன்கள் முடிந்துவிடது. இந்த ஐந்து போட்டிகளையும் நடிகர் கமல்ஹாசனே நடத்தினார். ஓவியா, ஜூலி, பொன்னம்பலம், வையாபுரி, கஞ்சா கருப்பு, யாஷிகா, சினேகன், கவின், லாஸ்லியா, வனிதா விஜயகுமார், கஸ்தூரி, பிரியங்கா, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பல பிரபங்கள் இதில் கலந்து கொண்டனர்.
100 நாட்கள் செல்போன் பேசக்கூடாது, குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என யாரையும் பார்க்கக் கூடாது, பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்குகளை சரியாக செய்ய வேண்டும் என பல விதிமுறைகளோடு போட்டியாளர்கள் விளையாட வேண்டும்.
இறுதியில் சிறப்பாக விளையாடியவருக்கு முதல் பரிசாக ரூ.50 லட்சம் வழங்கப்படும். நடந்து முடிந்த 5வது சீசனில் ராஜு வெற்றிபெற்று அந்த பரிசை வாங்கினார். விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10லிருந்து 11 மணி வரையும், சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 9.30 மணி முதல் 11 மணி வரை இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வந்தது.
இந்நிலையில், தற்போது ஓடிடி தளம் பிரபலமாகியுள்ள நிலையில் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஆப்பில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்ட்டிமேட் நிகழ்ச்சி விரைவில் துவங்கவுள்ளது. இந்த அறிவிப்பை இறுதி நாளன்று கமலே வெளியிட்டார்.
இந்த அல்ட்டிமேட் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதற்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமான ஓவியா உள்ளிட்ட பலரும் கலந்து கொள்வார்கள். கடந்த முறை தோற்றுப்போனவர்கள் இந்த முறை வெற்றி பெற முயற்சி செய்வார்கள் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக பாடலாசிரியர் சினேகன் கலந்து கொள்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புரமோஷன் வீடியோவும் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயனைப் பொருத்த…
கங்குவா படத்தின்…
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…