
Cinema News
தனுஷுக்கே அம்மாவா நடிச்சாச்சு! தளபதிக்கு நடிக்க மாட்டேனா? சினேகாவின் முடிவால் ஆச்சரியத்தில் கோலிவுட்
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சினேகா. புன்னகை அரசி என்ற செல்லப்பெயரால் அன்போடு அழைக்கப்பட்டவர். பல முன்னனி நடிகர்களுடன் இணைந்து ஆட்டம் போட்டவர். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
ரசிகர்களும் இவரை தன் குடும்பத்தில் ஒருவராகவே பார்க்க ஆரம்பித்தனர். ஏனெனில் எதார்த்தமான நடிப்பு, குடும்ப பாங்கான முகம் என ஒட்டுமொத்த குடும்ப ரசிகர்களையும் கவர்ந்தார் சினேகா.
இதையும் படிங்க : அஜித் சொன்னதால்தான் வெங்கட் பிரபுவுடன் இணைந்தாரா விஜய்?.. தெய்வ வாக்கு தல!…
நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சினேகாவிற்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு நடிப்பதை குறைத்துக் கொண்ட சினேகா தனுஷ் நடித்த பட்டாசு என்ற படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் ரீ எண்ட்ரி கொடுத்தார்.
அதுமட்டுமில்லாமல் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்தார். இருந்தாலும் முன்பு மாதிரி சினேகாவை வெள்ளித்திரையில் பார்க்க முடியவில்லை. இந்த நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள தளபதி 68 படத்தில் சினேகா நடிப்பதாக சில தகவல்கள் பரவுகிறது.
இதையும் படிங்க : விஜயிடம் கண்ணீர் விட்ட மகள்!… இந்த படத்திற்கா இவ்வளவு பில்டப்பு?!… வசூல் வாய பொழந்த கதையால இருக்கு!
தந்தை மகன் என இருவேடங்களில் நடிக்கும் விஜய்க்கு ஒரு ஜோடியாக சினேகா நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ஜோதிகா, சிம்ரனை அணுகிய படக்குழுவினர் ஒரு மகனுக்கு அம்மாவாக நடிக்க முடியாது என நடிக்க மறுத்து விட்டார்களாம்.
அதன் பிறகே சினேகா இந்தப் படத்திற்கு வந்ததாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே சினேகா பட்டாசு படத்தில் தனுசுக்கு ஜோடியாகவும் அம்மாவாகவும் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பட்ட கடனை அடைக்க போராடும் தனுஷ்! முத்திரை பதிச்சாலும் மனுஷனுக்கு பின்னாடி இப்படி ஒரு சோக கதையா?