Connect with us

Cinema News

நல்லவேளை ஜோதிகா நடிக்கல!.. சினேகா என்னம்மா க்யூட்டா இருக்காங்க!.. டிரெண்டிங்கில் கோட் 2வது பாடல்!..

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று மாலை 5.30 மணிக்கு கோட் படத்தின் 2வது பாடலான “சின்ன சின்னக் கண்கள்” பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக அமைந்தது. நடிகர் விஜய் பர்த்டே செலிபிரேஷன் எல்லாம் கிடையாது என புஸ்ஸி ஆனந்த் வாயிலாக அறிக்கை விட்டாலும், கோட் படத்தின் அப்டேட்களை வெளியிட்டு அவரது ரசிகர்களை சந்தோஷப்படுத்தி விட்டார்.

யுவன் சங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு இருவரும் எப்படியாவது மறைந்த தங்களது தங்கையின் குரலை இந்த படத்தில் பாட வைக்க வேண்டும் என நினைத்து ஏஐ டெக்னாலஜி மூலம் மீண்டும் பவதாரிணியின் குரலை கேட்க வைத்து ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் ஆக்கி விட்டனர். இந்த படத்துக்கு நேரடியாகவே பவாவை பாட வைக்க நினைத்தேன். ஆனால், இப்படி அவரது குரலை பதிவு செய்வேன் என கொஞ்சமும் நினைக்கவில்லை என யுவன் சங்கர் ராஜா பாடலை வெளியிட்டு ஃபீல் செய்துள்ளார்.

இதையும் படிங்க: நீங்க பிஸியான நடிகைனு தெரியும்.. அதுக்கு இதுக்கெல்லாம ஆள் வைப்பீங்க! மீனாவின் அட்ராசிட்டி

விஜய் மற்றும் பவதாரிணி பாடிய “சின்ன சின்ன கண்கள்” பாடல் 12 மணி நேரத்தில் 3 மில்லியன் வியூஸை அள்ளி டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து அந்த பாடலின் வியூஸ் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

விஜய்யுடன் நடிகை சினேகா வசீகரா படத்திற்கு பிறகு இணைந்து நடித்துள்ள நிலையில், இருவரது ஜோடி பொருத்தத்தை பார்த்த ரசிகர்கள் நல்லவேளை ஜோதிகா நடிக்கவில்லை என்றும் நடித்திருந்தால் ஓவர் ஆக்டிங்காக இருந்திருக்கும் என கிண்டல் செய்து வருகின்றனர். சினேகாவுக்கு முன்னதாக இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வெங்கட் பிரபு ஜோதிகாவை அணுகியதாகவும் அப்பா விஜய்க்கு எல்லாம் என்னால் ஜோடியாக நடிக்க முடியாது என அவர் மறுத்து விட்டதாக பேச்சுக்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சும்மா ஒன்னும் 200 கோடி வாங்கல! விஜயின் ஆரம்ப கால சம்பளத்தை கேட்டா ஆச்சரியப்படுவீங்க

ஜோதிகாவை விட சினேகா தான் செம அழகாகவும் க்யூட்டாகவும் இருக்காங்க, நடிகர் விஜய்யுடன் பல படங்களில் இவர் இணைந்து நடித்திருக்கலாம் மிஸ் பண்ணிட்டாங்க என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய்க்கு ஜோடியாகவும் அம்மாவாகவும் சினேகா இந்த படத்தில் படம் முழுக்க விஜய்யுடன் டிராவல் செய்வார் என அவரே சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். செப்டம்பர் 5ம் தேதிக்காக விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: கடைசி வரைக்கும் பண்ண மாட்டாருன்னு நினைச்ச ரஜினி ரசிகர்கள்!.. லேட்டா சம்பவம் செஞ்ச லோகேஷ் கனகராஜ்!..

google news
Continue Reading

More in Cinema News

To Top