என் அப்பாவுக்கு 100 வயசு... கோவிலில் தந்தைக்காக சிறப்பு வழிபாடு... நெகிழ்ச்சியில் சினேகன்...!
பாடலாசிரியர் சினேகன் தனது தந்தையின் பிறந்தநாளுக்கு பூஜை செய்த வீடியோவானதை இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் பல பாடல்களை எழுதி மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாடலாசிரியர் சினேகன். இவர் தனது பாடல்கள் மூலம் பிரபலமானதை காட்டிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக மிகப் பெரிய புகழை அடைந்தார். பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட இவர் மிகச் சிறப்பாக விளையாடி இரண்டாவது இடத்தை பிடித்தார்.
இதைத்தொடர்ந்து தான் இவர் சினிமாவில் இவ்வளவு அழகான பாடல்களை எல்லாம் எழுதி இருக்கிறார் என்பதே தெரிய வந்தது. பாடலாசிரியர் சினேகன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிறகு தன்னைவிட 16 வயது குறைவான நடிகை கன்னிகாவை திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவரும் எட்டு ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் உலகநாதன் கமலஹாசன் தாலி எடுத்துக் கொடுக்க திருமணம் செய்து வைத்தார். திருமணத்திற்கு பிறகு ஆளே ஸ்டைலிஷ் ஆக மாறிப்போன சினேகன் டைல்ஸ் ஆன உடை மற்றும் ட்ரெண்டிங் லுக்கில் கலக்கி வருகின்றார். சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர்கள் அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வருவார்கள்.
அந்த வகையில் தற்போது ஒரு வீடியோவை பகிர்த்திருக்கின்றார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. அதில் தனது அப்பாவுக்கு 100 வயது என்று பதிவிட்டு இருக்கும் சினேகன் தனது தந்தையை கோவிலுக்கு அழைத்துச் சென்று நூறாவது பிறந்த நாளுக்காக பூஜைகளை எல்லாம் செய்து அவரிடம் ஆசிர்வாதம் வாங்கி இருக்கின்றார் . இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் நீங்க இன்னும் நன்றாக வாழ வேண்டும் என்று பதிவிட்டு வருகிறார்கள்.