Categories: Entertainment News

கண்ணு படப்போகுது சுத்திப்போடுங்க… சினேகாவின் குடும்பத்திற்கு குவியும் லைக்ஸ்!

அழகிய குடும்ப புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளிய நடிகை சினேகா!

ஹோம்லி நடிகையான சினேகா தமிழ் சினிமாவில் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகையாக பிரபலமானார். விரும்புகிறேன் திரைப்படத்தில் அறிமுகாமன இவர் அஜித், விஜய், விக்ரம் , சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடியாக பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

sneha 1

புன்னகை அரசி என ரசிகர்களால் அழைக்கப்பட்ட ஸ்னேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அவ்வப்போது கியூட்டான குடும்ப புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

sneha 3

இதையும் படியுங்கள்: நீதான்யா உண்மையான பாகுபாலி…! அலேக்கா தூக்கி போஸ் கொடுக்கும் நம்ம சீனாதானா..

இந்நிலையில் தற்போது தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மகள், மகன் மற்றும் கணவருடன் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். இந்த போட்டோவுக்கு எக்கசக்க லைக்ஸ் குவிந்து குடும்பத்தை வர்ணித்து வாழ்த்தி வருகின்றனர்.

Published by
பிரஜன்