Cinema News
அப்படின்னா லிங்கா படம் தோல்வி இல்லையா!.. இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே!..
ரஜினியின் நடிப்பில் கே.எஸ்.ரவிகுமாரின் இயக்கத்தில் வெளியான படம் லிங்கா. அப்போது படம் படுதோல்வி என்று பேசப்பட்டது. இதுகுறித்து பிரபல பத்திரிகையாளர் கே.சங்கர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
லிங்கா படத்திற்கு நல்ல வரவேற்பு. ஓபனிங் பிரமாதமாக இருந்தது. படம் வெளியாகி 3 நாளிலேயே 100 கோடி வசூலைத் தாண்டியது. 4வது நாளில் பெரிய சர்ச்சை எழுந்தது. அதுவரை திரை உலகில் யாருன்னே தெரியாத நபர் திடீரென தெருமுனையில் நின்று பேட்டி கொடுத்தாராம். அவர் வந்தது செவ்வாய்க்கிழமை. படம் எனக்கு மிகப்பெரிய நஷ்டமாகி விட்டது. இவர் என்ன பெரிய சுதந்திரப் போராட்ட தியாகியா, நாட்டுத் தலைவரா? இவர் பிறந்த நாளன்று படத்தை ரிலீஸ் செய்யணும்னு என்ன அவசியம்? அப்படி ரிலீஸ் பண்ணினதனால தான் இந்தப் படம் சரியா போகல.
இதையும் படிங்க..பாரு என் கூட வந்திடுங்க ப்ளீஸ்.. வயசு பசங்களை கெஞ்ச வைக்கும் விஜே பார்வதி!.. செம பிக்ஸ்!..
பள்ளி மாணவர்கள் எல்லாருக்கும் தேர்வு நேரம். அவர்கள் எல்லாம் தியேட்டர் பக்கமே வரலன்னு காரணம் சொன்னாராம். அதற்கு நிருபர் படம் ரிலீஸாகி நாலு நாள் கூட ஆகல. நீங்க எந்த அடிப்படையில படம் நஷ்டம்னு சொல்றீங்கன்னு கேட்டுள்ளார். கூட்டம் வரலன்னு எப்படி சொல்றீங்க? அப்ப எல்லாம் ஆன்லைன் புக்கிங் வந்துடுச்சு. அதுல பார்த்தா எல்லாத் தியேட்டர்லயும் ஹவுஸ் புல்லுன்னு வந்துட்டு இருக்கு.
ஒரு படத்துக்கு முதல் 3 அல்லது 4 நாள் வரும். திங்கள், செவ்வாய் கிழமைகளில் டிராப் ஆகத்தான் செய்யும். எல்லாரும் இப்படிக் கேட்ட உடனே அவரு பேட்டியை முடிச்சிக்கிட்டு ஓடிட்டாரு. ஆனா யாரு இவருன்னு பார்த்தா திருச்சி ஏரியாவுல இணை விநியோகஸ்தர்னு தெரிஞ்சது.
அவரு பேசுன விதம் முழுக்க முழுக்க உள்நோக்கம் கொண்டது. எல்லாருமே இதை பெரிய செய்தியா போட ஆரம்பிச்சிட்டாங்க. லிங்கா தோல்வி. விநியோகஸ்தர் கதறல்னு போட்டுட்டாங்க. ஆனா நான் நடந்ததை தான் எழுதினேன். அவரு எங்கிட்ட கேட்டாரு. என்ன நீங்க இப்படி போட்டுருக்கீங்கன்னு கேட்டாரு.
இதையும் படிங்க…கொஞ்சமாவது நடிக்க கத்துக்குங்க.. மண்ட பத்தரம்!. விஜய் ஆண்டனியை போட்டு பொளக்கும் புளூசட்ட மாறன்..
அதுக்கு ஆமா என்ன நடந்ததோ அதைத் தான் போட்டுருக்கேன். முதல்ல நீங்க யாருன்னு கேட்டேன். நான் கப்பல்ல பெரிய எஞ்சினீயர்னாரு. அப்போ நீங்க உண்மையான விநியோகஸ்தர்னா படம் ரிலீஸாகி 3 மாசம் கழிச்சி பட புரொடியூசர்கிட்ட தான் போய் கேட்பாங்க. ஆனா நீங்க அப்படி எல்லாம் செய்யாம ரஜினியைப் பற்றித் தப்பா பேசுறீங்க. அது உள்நோக்கம் தானேன்னு கேட்டேன்.
அது மட்டுமல்ல. நானே உங்களை ரஜினி கிட்ட கூட்டிட்டு போறேன்னு சொன்னேன். கொஞ்ச நேரத்துல என் வாய்ஸ வாட்சப்ல அனுப்பினாரு. அதை வச்சி பிளாக்மெய்ல் பண்ணினாரு. கடைசில பார்த்தா நான் பேசினதை மட்டும் போட்டுட்டு அவர் பேசினதை எடிட் பண்ணி அந்த ஆடியோவை போட்டுவிட்டார். கடைசியில் அந்த ஆடியோ ரஜினி சார் வரை போனது. நியாயமா நாம செய்ய வேண்டியதை இவரு செஞ்சிருக்காரு. கடைசியில் அந்தப் புரொடியூசர் இந்தப் படத்தை வியாபாரம் பண்ணிய முறை தவறுன்னு சொன்னார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.