ஒரே ஆண்டில் பாக்யராஜ் இயக்கத்தில் இத்தனை சூப்பர் ஹிட் படங்களா...?!!!

antha 7 natkal
திரைத்துறையில் தனக்கென தனி பாணியை கடைபிடித்து ஒரு காலத்தில் நிலைத்து புகழ் பெற்று நின்றவர் நடிகரும் இயக்குனருமான கே.பாக்யராஜ். ரஜினி, கமல் கால கட்டத்தில் இவர் செய்தது தான் மகத்தான சாதனை. இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அதிலும் தாய்க்குலங்களின் ஆதரவு அமோகமாக இருக்கும்.
பாக்யராஜ் நிறைய சாதனைகள் படைத்துள்ளார். ஒரே ஆண்டில் 6 சூப்பர்ஹிட் படங்களை நடித்து, இயக்கியுள்ளார். அதுதான் 1981. அந்த சாதனை நிகழ்;த்தப்பட்ட ஆண்டு. இவற்றில் 4 படங்களில் அவரே நடித்து இயக்கியுள்ளார். இரு படங்களை இயக்கியுள்ளார். அந்த சுவாரசியமான படங்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.
மௌனகீதங்கள்

mouna geethangal
1981ல் வெளியானது. கே.பாக்யராஜ் நடித்து இயக்கியுள்ள படம். அவருடன் சரிதா, கல்லாப்பெட்டி சிங்காரம் உள்பட பலர் நடித்துள்ளனர். கங்கை அமரனின் இசையில் பாடல்கள் நச் ரகங்கள். டேடி டேடி, மாசமோ மார்கழி மாசம், மூக்குத்தி பூ மேலே காத்து உட்கார்ந்து வீசுதடி ஆகிய பாடல்கள் உள்ளன.
இன்று போய் நாளை வா

indru poi naalai vaa
1981ல் பாக்யராஜ் நடித்து இயக்கிய படம். இளையராஜாவன் இசை படத்திற்கு பிளஸ் பாயிண்ட். பாக்யராஜ் உடன் ராதிகா, கல்லாப்பெட்டி சிங்காரம், காந்திமதி உள்பட பலர் நடித்துள்ளனர். மதனா மதனா, மேரே பியாரி, பல நாள் ஆசை ஆகிய பாடல்கள் உள்ளன.
விடியும் வரை காத்திரு
பாக்யராஜ் நடித்து இயக்கி 1981ல் வெளியான படம். அவருடன் இணைந்து கராத்தே மணி, சங்கிலி முருகன் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் கேட்கும் வகையில் இருந்தன. அபிநயம் காட்டு, நீங்காத எண்ணம், பேசு என்னன்பே ஆகிய பாடல்கள் உள்ளன.
அந்த ஏழு நாட்கள்
பாக்யராஜ் எழுதி இயக்கி நடித்தும் உள்ளார். அவருடன் ராஜேஷ், அம்பிகா, கவுண்டமணி, கல்லாப்பெட்டி சிங்காரம் உள்பட பலர் நடித்துள்ளனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார். கவிதை அரங்கேறும் நேரம், ஸ்வரராக, என்னி இருந்தது ஈடேற, தென்றலது உன்னிடத்தில் ஆகிய சூப்பர்ஹிட் பாடல்கள் உள்ளன.
ஏக் ஹை பூல்
ஜிதேந்திரா, ரேகா, சபான ஆஷ்மி, நஸ்னீன், ராஜா துக்கல், அஸ்ராணி உள்பட பலர் நடித்துள்ளனர். லட்சுமிகாந்த் - பியாரிலால் இசை அமைத்துள்ளனர். கதை எழுதி இயக்கியவர் கே.பாக்யராஜ். இந்திப்படத்தை இயக்கி செம ஹிட் ஆக்கியுள்ளார் நம்ம இயக்குனர் பாக்யராஜ்.
ராதா கல்யாணம்

radha kalyanam
இது அந்த ஏழு நாட்கள் படத்தின் ரீமேக். தெலுங்கில் வெளியானது. திரைக்கதை எழுதியவர் கே.பாக்யராஜ். இயக்கியவர் பாபு. சந்திர மோகன், ராதிகா, சரத்பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். கே.வி.மகாதேவன் இசை அமைத்துள்ளார். இந்தப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.