எம்.எஸ்.வி பாடமறுத்த பாடல்.. சித்து வேலை செய்த சோ...ரிசல்ட் என்ன தெரியுமா?...
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் காமெடி நடிகராக வலம் வந்தவர் சோ ராமசாமி.. பல படங்களில் நகைச்சுவை நடிகராக கலக்கியுள்ளார். தான் நடிக்கும் திரைப்படங்களில் அன்றைய அரசியல் சூழ்நிலையை மறைமுகமாக பேசி ரசிகர்களிடம் கைதட்டலை பெற்றவர் சோ. சினிமாவுக்கு வருவதற்கு முன் நாடகங்களில் நடித்து கொண்டிருந்தார். சொந்தமாக பல நாடகங்களையும் நடத்தியுள்ளார்.
தான் நடிக்கும் படங்களில் எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற நடிகர்களையே கிண்டலடித்து வசனம் பேசுவதில் சோ கில்லாடி. இதனாலேயே அவர்கள் சோ-வுடன் நடிக்கும்போது கவனமாக நடிப்பார்கள். சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கும் போதே துக்ளக் எனும் அரசியல் பத்திரிக்கையையும் துவங்கினார். இப்போது வரை இந்த பத்திரிக்கை வெளியாகி வருகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் ‘உங்கள் அரசியல் குரு யார்?’ என கேட்டதற்கு அவர் சொன்ன பதில் ‘சோ ராமசாமி’.
இவர் எழுதி இயக்கிய திரைப்படம் ‘முகம்மது பின் துக்ளக்’. அரசியலை நையாண்டி செய்து இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை அமைத்திருப்பார் சோ. சோ கொஞ்சம் ஏடாகூடமான நபர் என்பதால் அந்த படத்திற்கு இசையக்க மறுத்தார் எம்.எஸ்.விஸ்வநாதன். ஆனால், அவரை ஒருவழியாக சம்மதிக்க வைத்து அப்படத்திற்கு இசையமைக்க வைத்தார் சோ.
அதோடு, அப்படத்தின் டைட்டில் கார்டில் வரும் ‘அல்லா.. அல்லா நீ இல்லாத உலகே இல்லை’ எனும் பாடலை எம்.எஸ்.விஸ்வநாதனை பாட சொன்னார் சோ. ஆனால், இதில் எம்.எஸ்.விக்கு உடன்பாடு இல்லை. முகம்மது ரஃபியை பாட வைக்கிறேன் என அவர் சொல்ல, சரி சீட்டு குலுக்கி பார்ப்போம் என சோ சொன்ன அவரும் சம்மதித்தார். சீட்டில் வந்ததோ எம்.எஸ்.வி பெயர். எனவே, அந்த பாடலை பாடினார்.
முகம்மது பின் துக்ளக் படம் வெளியான போது பெரிய சர்ச்சை எழுந்தது. இப்படத்தை நிறுத்த சிலர் தியேட்டர்களிலும் கூடினர். ஆனால், எம்.எஸ்.வி குரலில் ‘அல்லா அல்லா’ பாடலோடு டைட்டில் ஓட தியேட்டரில் பெரிய கைத்தட்டல். எனவே, அப்படத்தை யாராலும் தடுக்கமுடியவில்லை.
சரி விஷத்துக்கு வருவோம். அந்த சீட்டை குலுக்கி போடும்போது இரண்டு சீட்டிலும் எம்.எஸ்.விஸ்வநாதனின் பெயரையோ சோ எழுதிப்போட்டுள்ளார். எம்.எஸ்.வி அந்த பாடலை பாடி முடித்த பின் தான் செய்ததை சோ அவரிடம் கூறியுள்ளார். இது பெரிய அயோக்கியத்தனம் என கோபப்பட்டாராம் எம்.எஸ்.வி. ஆனால், அந்த பாடலே படத்திற்கு பெரிய பலமாக மாறி ஹிட் அடித்தது.
இதையும் படிங்க: தொப்பி அணியும் பழக்கம் எம்.ஜி.ஆருக்கு எப்படி வந்தது தெரியுமா?.. ஒரு சுவாரஸ்ய தகவல்..