இவரையே நம்பி நடுத்தெருவுக்கு வந்த இயக்குனர்...! கழட்டி விட்டாரா ரஜினி...?
ஆரம்பகாலங்களில் வெற்றி இயக்குனராக வலம் வந்தவர்களில் ஒருவர் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். தமிழ் சினிமாவில் நடிகர் அளவுக்கு இயக்குனருக்கு ரசிகர்கள் இருந்தார்கள் என்றால் அது இவருக்குத்தான். ரஜினி நடித்த படையப்பா படத்தை இயக்கிய பின் தமிழக மக்கள் மத்தியில் ஏகப்பட்ட ரசிகர்களை உருவாக்கினார்.
ஆர்ம்பத்தில் முத்து, அருணாச்சலம், போன்ற தரமான படங்களை கொடுத்து ரஜினியை இன்னும் உயர்த்திவிட்டார்
என்றே சொல்லலாம். மேலும் ஆனந்த பாபு, சரத்குமார், போன்றவர்களை குடும்பமே கொண்டாடும் கமர்ஷியலான படங்களை கொடுத்து ஹிட் ஆக்கினார்.
அவர்களுக்கு அப்புறம் ரஜினியை வைத்து படம் பண்ணினார். இடையில் ஏகப்பட்ட இடைவெளி வர நீண்ட நாள்களுக்க பின் ரஜினியை வைத்து லிங்கா படத்தை எடுத்தார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவில் இல்லை என்றாலும் ஹீரோக்கு உரித்தான வசூல் படைத்தது.
அந்த படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினியுடன் இணைந்து ஒரு ஹிட் படத்தை எடுத்தாக வேண்டும் என ரஜினியிடம் கேட்டு வருகிறாராம் ரவிக்குமார். சுமார் 8 வருடங்களாக ரஜினி காக்க வைத்துக்கொண்டிருக்கிறாராம். ஆனாலும் ரஜினி இடம் கொடுக்க வில்லை.ரஜினி மட்டுமில்ல ரஜினியின் குடும்பமே ரவிக்குமாரிடம் பேச மறுக்கிறது என வட்டாரங்கள் தெரிவித்து வருகிறது.