Connect with us
kamal

Biggboss Tamil 7

ஒரு போன் போட்டா பிக்பாஸ் வீட்டை நொறுக்கிடுவாங்க! தகுதியில்லாத கமல் – ஆவேசத்தில் பிரபலம்

Biggboss Season 7: விஜய் டிவியில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி. நாளுக்கு நாள் இந்த சீசன் மக்கள் மத்தியில் பெரிய ஹைப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரதீப்பை வீட்டை விட்டு வெளியேற்றியதில் இருந்து பிக்பாஸுக்கு எதிராக கண்டன குரல் எழுந்து வருகிறது.

இந்த நிலையில் பிரபல சமூக ஆர்வலர் ராஜேஸ்வரி பிரியா பிக்பாஸின் இந்த சீசனை பற்றி கடுமையாக விமர்சித்திருக்கிறார். இவர் ஏற்கனவே விஜய் மீதும் லியோ படத்தின் மீது புகார் கொடுத்தவர். அவர்தான் இப்போது ‘ஒரு போன் போட்டா பிக்பாஸ் வீட்டை போய் நொறுக்கிவிட்டு வந்துடுவாங்க’ என பேசியிருக்கிறார்.

இதையும் படிங்க: இந்த போஸுக்கு ஃபைவ் ஸ்டார் கொடுக்கலாம்!.. ரசிகர்களை ஜூம் பன்ணி பாக்க வைக்கும் யாஷிகா…

கலாச்சாரத்தின் சீர்கேடே பிக்பாஸ் நிகழ்ச்சிதான் என்று கூறியிருக்கிறார்.அதுவும் நிக்‌ஷனும் ஐஸுவும் சேர்ந்து செய்கிற காரியத்தை பார்க்கும் போது எங்க கலாச்சாரம் போகுதுனு தெரியவில்லை என்றும் கூறினார். ஐஸு கட்டியிருந்த வேட்டியை முட்டி வரை தூக்கி சரி செய்து கொண்டிருக்கிறார் நிக்‌ஷன். இதெல்லாம் பார்க்க தப்பா தெரியலயா? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அதே போல் விசித்ரா ஆரம்பத்தில் இருந்தே பிரதீப்பை பற்றியும் அவர் பேசும் வார்த்தைகளை பற்றியும் வீட்டில் மற்ற போட்டியாளர்களிடம் சொல்லிக் கொண்டுதான் இருந்தார். ஒரு சமயம் விசித்ராவிடமே பிரதீப் ‘யார் கூடயாவது படுக்கனும் போல் இருக்கிறது’ என்று கூறினாராம்.

இதையும் படிங்க: எப்பா செழியா மொத்தத்துல உண்மைய சொன்னீயே…! கோபி சார் மூஞ்சு எங்க வச்சிப்பீங்க..!

இதை அப்பவே பெரிய பிரச்சினையாக மாற்றி அன்றைக்கே பிரதீப்பை வெளியே அனுப்பியிருந்தால் இன்று கமல் சொல்லுவதற்கு தகுதி இருந்திருக்கும். ஒரு தவறை தண்டிக்கக் கூடியவராக இருந்தால் அதை விட்டுக் கொடுத்து போகமாட்டார்கள். சிறிய தண்டனையாவது  கொடுப்பார்கள். மன்னிப்பு கூட கேட்க சொல்லுவார்கள்.

ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு இவ்ளோ நாள் பிரதீப்பை பேச விட்டு வேடிக்கை பார்ப்பது மக்களை ஏமாற்றுவதற்கு சமம் என்றும் கூறியிருக்கிறார். இந்த நிகழ்ச்சி மூலம் தவறான கலாச்சாரத்தை புகுத்துவதாகவும் ஆபாச உடைகளை பெண்கள் அணிந்திருக்கிறார்கள் என்றும் அங்கு பேசக் கூடிய டாப்பிக் கூட மிக மோசமான டாப்பிக்காவே இருக்கிறது என்றும் ராஜேஸ்வரி பிரியா கூறினார்.

இதையும் படிங்க: கைதி பட கிளைமேக்ஸ் சீனை அங்க இருந்துதான் சுட்டேன்!.. ஓப்பன ஒத்துகொண்ட லோகேஷ்!..

google news
Continue Reading

More in Biggboss Tamil 7

To Top