நயன்தாராவையே ஓவர் டேக் செய்த விஜே பார்வதி.... போட்டோவை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்...!

by ராம் சுதன் |   ( Updated:2022-05-16 02:56:59  )
vj parvathi
X

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாராவிற்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் நயன்தாராவையே ஒருவர் ஓவர் டேக் செய்துள்ள சம்பவம் தான் தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக உள்ளது.

vj parvathi-nayanthara

ஆமாங்க சமீபத்தில் கலாட்டா மீடியா சார்பாக கலாட்டா grown 2022 என்ற விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை நயன்தாராவிற்கு “The Empress of Indian Cinema” என்ற விருது வழங்கப்பட்டது. இந்த விருது விழாவில் விஜே பார்வதி, நயன்தாரா உடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவு செய்திருந்தார்.

இதனை கண்ட ரசிகர்கள் பலரும் நயன்தாராவை விட நீ அழகா இருக்க பாரு என கமெண்ட்டில் ஜொள்ளு விட்டு வருகிறார்கள். தொடர்ந்து பலர் இப்படி புகழ்ந்து கமெண்ட் செய்ய மகிழ்ச்சியில் திளைத்த பார்வதி அனைவருக்கும் நன்றி என ரிப்ளே செய்துள்ளார்.

vj parvathy

தற்போது இதுதான் டிரெண்டிங்கில் உள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவையே ஓவர் டேக் செய்த விஜே பார்வதி யார் என பலரும் ஆராய்ந்து வருகிறார்கள். பார்வதிக்கு பெரிய அறிமுகம் தேவையில்லை. முன்னதாக பேட்டிகளில் அடல்ட் கேள்விகள் கேட்டு சர்ச்சையில் சிக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி மற்றும் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான சர்வைவர் ரியாலிட்டி ஷோ ஆகிய நிகழ்ச்சிகளில் பார்வதி பங்கேற்றுள்ளார். இதுதவிர படங்கள் மற்றும் வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

vj parvathy

Next Story