More
Categories: Cinema News latest news

சாலமன் பாப்பையாவுக்கும் பாலாவுக்கும் இப்படி ஒரு தொடர்பு இருக்கா?… இது தெரியாம போச்சே!

இயக்குனர் பாலா தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குனர் என்பது பலரும் அறிந்ததே. பாலாவின் திரைப்படங்களில் எளிய மனிதர்களின் துயரங்கள் மிகவும் மனதுக்கு நெருக்கமாக படமாக்கப்பட்டிருக்கும். “பிதாமகன்”, “நான் கடவுள்”, “பரதேசி”, “தாரை தப்பட்டை” ஆகிய திரைப்படங்களை இதற்கு சிறந்த உதாரணங்களாக கூறலாம். பாலா தற்போது “வணங்கான்” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் முதலில் சூர்யாதான் ஹீரோவாக நடித்தார். ஆனால் திடீரென “வணங்கான்” புராஜெக்ட்டில் இருந்து சூர்யா வெளிவந்ததால் தற்போது அருண் விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

Advertising
Advertising

பாலாவின் சொந்த ஊர் தேனி மாவட்டத்தை சேர்ந்த சின்னமனூர். இவர் தனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு சென்னைக்கு ஓடிவந்துவிட்டார். மன்சூர் என்ற தயாரிப்பாளர் பாலாவுக்கு நெருங்கிய நண்பராக இருந்தார். அவரின் பரிந்துரையின் மூலம் சென்னையில் கஃபார் என்ற தயாரிப்பாளரை சென்று பார்த்தார். அவரிடம் “எனக்கு எப்படியாவது உதவி இயக்குனராக வாய்ப்பு வாங்கித்தாருங்கள்” என கேட்க, அதற்கு கஃபார் ஒரு பரிந்துரை கடிதத்தை கொடுத்து பாண்டியராஜனிடம் அனுப்பியிருக்கிறார். பாண்டியராஜன், “வாய்ப்பு வந்தால் சொல்கிறேன்” என கூறியிருக்கிறார். எனினும் பாலாவுக்கு எந்த வாய்ப்புகளும் வரவில்லை.

Arivumathi

அதன் பிறகு தயாரிப்பாளர் கஃபார் மூலம் பாடாலாசிரியர் அறிவுமதியிடம் அறிமுகம் கிடைத்தது. அறிவுமதி அந்த சமயத்தில் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அவர் மூலமாகத்தான் பாலு மகேந்திராவிடம் உதவியாளராக சேர்ந்திருக்கிறார் பாலா.

Solomon Pappaiah

இந்த நிலையில் பிரபல பட்டிமன்ற பேச்சாளரான சாலமன் பாப்பையாவுக்கும் பாலாவுக்கும் இருந்த தொடர்பு குறித்து ஒரு தகவல் வெளிவந்துள்ளது. பாலா மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில்தான் படித்தார். அங்கே அவருக்கு பேராசிரியராக இருந்திருக்கிறார் சாலமன் பாப்பையா. பாலா கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது அவரிடம் பல கெட்ட பழக்கங்கள் இருந்திருக்கிறது. இரவெல்லாம் நன்றாக அலைந்துவிட்டு பகலில் கல்லூரியில் வந்து தூங்குவாராம். அப்போது சாலமன் பாப்பையா, பாலாவை பார்த்து, “என்ன இரவெல்லாம் வேட்டையாடிட்டு களைப்புல மைனர் ஓய்வு எடுக்குறீங்களோ?” என நக்கலாக கேட்பாராம்.

இதையும் படிங்க: படம் முழுக்க பொய்யா இருக்கு..! –  கேரளா ஸ்டோரி திரைப்படத்தால் கடுப்பான இயக்குனர் அமீர்…

Published by
Arun Prasad

Recent Posts