ஷங்கர் பண்ன அந்த வேலை!. கடுப்பாகி சினிமாவில் நடிப்பதையே நிறுத்திய சாலமன் பாப்பையா!..

by சிவா |   ( Updated:2023-02-21 08:42:35  )
shankar
X

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணிபுரிந்தவர் சாலமன் பாப்பையா. பட்டிமன்றம் மூலம் இவர் மக்களுக்கு பிரபலமானவர். தமிழில் பல இலக்கியங்களையும், திருக்குறள், புறநானூற்று உள்ளிட்ட பல இதிகாசங்கங்களையும் கரைத்து குடித்தவர். ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு தமிழ் பாடம் எடுத்தவர்.

பட்டி மன்றத்தில் இவர் பேசும் ஸ்டைலுக்கும், அடிக்கும் நக்கலுக்கும், பேசும் தமிழுக்கும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. தற்போது கூட தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய பண்டிகைகளில் தொலைக்காட்சியில் இவரின் பட்டிமன்ற நிகழ்ச்சி இடம் பெற்றிருக்கும்.

solomon

solomon

இவர் 2 திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இரண்டுமே பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியவைகள்தான். முதலில் பாய்ஸ் படத்தில் நீதிபதியாக நடித்திருப்பார். அதன்பின் ரஜினி நடித்த சிவாஜி படத்தில் ‘எனக்கு ரெண்டு பொண்ணுங்க. ஒன்னு அங்கவை இன்னொன்னு சங்கவை. பழகி பாருங்க.. புடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்குங்க.. இல்லனா ஃபிரண்ட்ஸா இருப்போம்’ என வசனம் பேசி ரசிகர்களை சிரிக்க வைத்தார்.

சாலமன் பாப்பையாவுக்கு இரண்டு கருப்பான பெண்கள் இருப்பது போலவும், அவர்கள் திருமணத்திற்கு ஏங்குவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இந்த காமெடியை ரசிகர்கள் ரசித்தாலும் இது சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

சாலமன் பாப்பையா போன்ற ஒருவர் இதுபோன்ற உருவக்கேலி உள்ள காமெடியில் நடிக்கலாமா என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரது வீட்டிலும் இதுபோன்ற காமெடி காட்சிகளில் நடிக்க வேண்டாம் என கூறியதால் சாலமன் பாப்பையா சிவாஜி படத்திற்கு பின் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சிவாஜியா?.. அவரெல்லாம் வச்சி படம் எடுக்க மாட்டேன்.. கோபத்தில் சீரிய இயக்குனர்..

Next Story