வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்த பிரபலங்களின் விபரம்!..முதலில் அறிமுகம் செய்தது யாருனு தெரியுமா?..

by Rohini |
cele_main_cine
X

இந்தியாவில் பொதுவாகவே வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது என்பது தடை செய்யப்பட்டுள்ளது. அதுவும் கணவன், மனைவி இருவருக்கும் ஏதாவது பிரச்சினை இருந்து 5 வருடங்கள் கடந்த நிலையில் தான் இந்த முறை செல்லும் என சொல்லப்படுகிறது. அதில் எப்படி நடிகை நயன் மற்றும் விக்கி சாத்தியப்பட்டார்கள் என்பது தான் தெரியவில்லை.

cele1_cine

மேலும் இந்திய சினிமாவில் இப்படி ஒரு சில பிரபலங்கள் வாடகை தாய் மூலம் குழந்தைகளை பெற்றெடுத்திருக்கின்றனர். அவர்களின் விபரம் பின்வருமாறு: பாலிவுட் நட்சத்திர தம்பதியான அமீர்கான் - கிரண்ராவ் வாடகைத்தாய் மூலம் 2011 ஆம் ஆண்டு ஒரு மகனை பெற்றெடுத்தனர். இவர்கள் தான் திரையுலகில் வாடகை தாய் முறையை அறிமுகம் செய்தார்கள்.

இதையும் படிங்கள் : “கமல் படம் மாதிரியே இல்ல, தேறாது”… அதிர்ச்சியடைந்த ஏவிஎம்… சர்ப்ரைஸ் கொடுத்த ரசிகர்கள்…

cele2_cine

அதன் பின் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாரூக்கான் - கவுரிகான் 2013 ஆம் ஆண்டு வாடகை தாய் மூலம் தன் இளையமகனான அப்ராம் கானை பெற்றெடுத்தனர். பின்னர் கவர்ச்சி நடிகையான சன்னிலியோனும் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தனர். இவர்களை அடுத்து நடிகை ஷில்பா செட்டி முதல் குழந்தையை தானே பெற்றுக் கொண்டு இரண்டாவது குழந்தையை வாடகை தாய் மூலம் பெற்றெடுத்தார்.

cele3_cine

இதையும் படிங்கள் : ப்ப்ப்பா!..கொழுக் மொழுக் குலாப்ஜாமூன்!…தழும்ப தழும்ப அழகை காட்டும் டிடி….

இப்படி நடிகையும் பஞ்சாப் கிங்ஸ் கிரிக்கெட் உரிமையாளருமான பிரீத்தி ஜிந்தா, பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா போன்றோரும் வாடகை தாய் மூலம் தான் குழந்தைகளை பெற்றுக் கொண்டனர். இந்த வரிசையில் சொல்லப்போனால் தமிழ் திரையுலகில் நயன்தாரா-விக்கி ஜோடி இந்த முறையை பின்பற்றியிருக்கின்றனர்.

Next Story