இப்ப ஆடுங்கடா டேன்ஸ்!.. அஜித் ரசிகர்களுக்கு ஆணியை வைத்த தியேட்டர் அதிபர்....

by Manikandan |   ( Updated:2022-02-24 00:54:58  )
இப்ப ஆடுங்கடா டேன்ஸ்!.. அஜித் ரசிகர்களுக்கு ஆணியை வைத்த தியேட்டர் அதிபர்....
X

வலிமை திரைப்படம் இன்று கோலாகலமாக ஒரு திருவிழா போல வெளியாகி உள்ளது. தன்னை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சுமார் 800 நாட்களுக்கு மேலாக தங்களது ஆஸ்தான நாயகனை திரையில் பார்த்த, பார்க்கபோகிற சந்தோஷத்தில் திக்குமுக்காடி நிற்கின்றனர்.

இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்ப்பார்கள் என்பதில் ஆச்சர்யமில்லை. அதனை தியேட்டர்காரர்கள் எப்படி சமாளிப்பது என தெரியாமல் முழித்து வருகின்றனர். அதில் ஒரு குறிப்பிட்ட திரையரங்கம் ரசிகர்கள் திரை முன் நின்று ஆட கூடாது என திரைக்கு கிழே ஆணி படுகை வைத்துள்ளது.

valimai

அதாவது கடைக்கு முன் யாரும் உட்கார கூடாது என ஒரு ஆணி படுகை போல இருக்குமே அதனை பதித்து வைத்துள்ளனர். இதனை ரசிகர்கள் ஷேர் செய்து சென்னை ரோகினி திரையரங்கை டேக் செய்து பதில் கேட்டனர். உடனே அந்த திரையரங்கு நிர்வாகம் பதிலளித்தது.

இதையும் படியுங்களேன் - வெறித்தனமான லாபம்.! பீஸ்ட் தயாரிப்பாளருக்கு அடித்த மிக பெரிய ஜாக்பாட்.!

எங்கள் தியேட்டர் எப்போதும் ரசிகர்களுக்கு முக்கியதுவம் கொடுக்கும் தியேட்டர் தான். நாங்கள் இவ்வாறு செய்யவில்லை. எங்கள் ரசிகர்களை எப்படி சந்தோஷப்படுத்த வேண்டும் என எங்களுக்கு தெரியும் என பதிலளித்து விட்டனர். கமெண்ட்ஸில் மற்ற ரசிகர்கள் வேறு தியேட்டர் பெயரை சொல்லி திட்டி வருகின்றனர்.

valimai

ரசிகர்கள் கொண்டாடுவதற்கு தான் படங்கள் திரைக்கு வருகிறது. அவர்கள் வந்து கொண்டாடினால் தான் தியேட்டர்காரர்களுக்கு லாபம். ரசிகர்களை முறையாக பொருளை சேதப்படுத்தாமல் கொண்டாட கேட்டுக்கொள்ளலாம். அதனை விடுத்து இந்த மாதிரியான வேளைகளில் ஈடுபட்டால் ரசிகர்கள் கோபமடையதான் செய்வார்கள்.

Next Story