Categories: latest news

ஒரே ஒரு வீடியோ! டோட்டல் இமேஜும் காலி..இன்னும் என்னெல்லாம் காத்திருக்கோ விஜய்க்கு?

Actor Vijay: சமீபத்தில் நடிகர் விஜய் மாணவர்களுக்கான கல்வி உதவி வழங்கும் விழாவில் கலந்து கொண்டு கடந்த பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஏராளமான உதவிகளை வழங்கினார். இரண்டாவது வருடமாக இந்த பணியை தொடர்ந்து இருக்கும் விஜயை பாராட்டி திரை பிரபலங்கள் உட்பட அனைவரும் அவர்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர் .

அது சம்பந்தமான பல வீடியோக்கள் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை நேரடியாக சந்திக்க இருக்கிறார் விஜய். அதற்கு முன்னெடுப்பாக இந்த பணிகளை செய்து கொண்டு வருகிறார் விஜய். அரசியலில் ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என தீவிரம் காட்டி வரும் விஜய்க்கு எதிராக பல சதித்திட்டங்கள் தீட்டப்படுவதாக இணையதளத்தில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

இதையும் படிங்க: எவனும் என்னை இப்படி வேலை வாங்கினது இல்லை!.. ஆதிக்கை இப்படி சொல்லிட்டாரே அஜித்!….

அதற்கு ஒரு உதாரணமாக சமீபத்தில் ஒரு வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது அந்த கல்வி உதவி வழங்கும் விழாவில் ஒரு மாணவியின் தோள் மேல் விஜய் கை போடுவதும் அதை அந்த மாணவி எடுப்பது மாதிரியும் அந்த வீடியோவில் பதிவாகி இருந்ததும் இதுதான் இப்போது பெரும் பேசு பொருளாக மாறி இருக்கிறது ம்அதாவது விஜய் எந்த நோக்கத்தில் கையைப் போட்டார் என்ற அடிப்படையில் இந்த பேச்சு பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறதும்.

இதைப்பற்றி கூறிய வலைப்பேச்சு அந்தணன்  ‘இது எதிர்க்கட்சி செய்யும் சதித்தட்டமாக கூட இருக்கலாம் என்று சொன்னாலும் விஜய் அந்த ஒரு மாணவியின் மேல் மட்டும் கையை போடவில்லை. அங்கு வந்திருந்த அனைத்து மாணவ மாணவியர்களின் தோள் மேலும் கையைப் போட்டுத்தான் நின்று போஸ் கொடுத்தார். அது மட்டுமல்லாமல் அவர்களுடைய பெற்றோர்கள் தோள் மேலும் கையை போட்டு போஸ் கொடுத்து நின்று கொண்டிருந்தார்.

இதையும் படிங்க: கல்கி படத்தை மிஞ்சிய ‘கங்குவா’! படத்தை பார்த்த பிரபலம் சொன்ன சூப்பர் தகவல்

அதனால் அவர் அரசியலுக்கு வருவதால் இந்த மாதிரி வேலைகள் நடக்கத்தான் செய்யும். இனிமேல் விஜய் இதை செய்ய மாட்டார் என்று தான் நினைக்கிறேன். ஏனெனில் அந்த அளவு இந்த வீடியோ பெரும் வைரலாகி வருகின்றது’ என வலைப்பேச்சு அந்தணன் கூறினார் .இதற்கிடையில் அந்த வீடியோவை முழுவதுமாக பார்க்கும் பொழுது ஒரு வேளை அந்த மாணவிக்கு பிடிக்காமல் இந்த சம்பவம் நடந்திருந்தால் அந்த முழு வீடியோவில் அந்த மாணவி விஜயின் கையை எடுப்பதும் அதன் பிறகு விஜயை விட்டு கொஞ்சம் தள்ளி நிற்பதுமாக அந்த மாணவி செய்திருக்கலாம்.

ஆனால் அந்த வீடியோவில் விஜயின் கையை எடுத்த அந்த மாணவி மீண்டும் விஜயின் கையோடு தன் கையை கோர்த்துக்கொண்டு போஸ் கொடுக்க தான் ஆசைப்பட்டிருக்கிறார். அதுவும் அந்த வீடியோவில் பதிவாகி இருக்கின்றது. வெறும் அந்த ஒரு க்ளிம்ப்ஸ் வீடியோவை மட்டும் பார்த்து இணையதளத்தில் விஜயை தவறாக சித்தரித்து வருகின்றனர். முழு வீடியோவை பார்க்கும் போது அந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை. அந்த மாணவிக்கு தோள்மேல் கையை போட்டு எடுப்பதை விட விஜயின் கையோடு கைகோர்த்து நிற்க ஆசைப்பட்டிருக்கிறார் .அதன் காரணமாகவே தனது தோள் மேல் இருந்த விஜயின் கையை எடுத்திருக்கிறார் அந்த மாணவி.

Rohini

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

6 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

7 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

7 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

9 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

15 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

16 hours ago