விஜயின் தமிழக வெற்றி கழகத்திற்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது.. கிரிக்கெட் பேட், கால்பந்து, ஹெல்மெட், விசில் உள்ளிட்ட 10 சின்னங்களை கொடுத்து இதில் தங்களுக்கு ஒன்றை ஒதுக்கும்படி தவெக சார்பில் தேர்தல் ஆணையத்திலும் கேட்கப்பட்டிருந்தது.. அதில் தமிழக வெற்றி கழகம் சார்பில் முன்னுரிமையாக கேட்கப்பட்ட விசிலையே தேர்தல் ஆணையம் வழங்கியிருக்கிறது.
விசில் சின்னம் கிடைத்தபின் விஜயும், தமிழக வெற்றிக் கழகத்தினரும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.. ஏனெனில் விசில் என்பது ஒரு கவர்ச்சிகரமான சின்னம்.. ‘விசில் போடு’ என இந்த சின்னத்தை பிரபலப்படுத்த முடியும்.. விசில் போடு என்கிற வாசகம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மூலம் தமிழ்நாட்டு இளைஞரிடம் மிகவும் பிரபலம்.. ‘விசில் போடு’ என்கிற வாசகத்தை பிரச்சார வாசமாக பயன்படுத்த முடியும்..
அதேநேரம் விசில் சின்னத்தை பயன்படுத்துவதில் சில சிக்கல்களும் இருக்கிறது.. ஏற்கனவே தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன் ‘தூங்கிக் கொண்டிருப்பவர்கள், வயதானவர்களின் காதுகளில் போய் விசில் அடித்துவிடாதீர்கள். அது அவர்களுக்கு எரிச்சலை கொடுக்கும். எனவே, எச்சரிக்கையாக செயல்படுங்கள்’ என அறிவுரை செய்திருந்தார். இந்நிலையில்தான் சில புள்ளிவிபர புலிகள் விசில் சின்னத்தை பயன்படுத்துவதில் இருக்கும் ஆபத்தை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
விசிலை ஊதுவதற்கு முன் தவெகவினரும், ரசிகர்களும் ஒரு முக்கியமான விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும். விசில் சத்தம் 55 வயதுக்கு மேற்பட்டவர்களின் தூக்கத்தை கெடுக்கும், மன சிதைவை ஏற்படுத்தும். தூக்கம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும் சப்தம் அது.
ஏற்கனவே 35லிருந்து 55 வயது வரை பணிக்கு செல்லும் மக்கள் ஒரு விதமான மன அழுத்தத்தோடுதான் வாழ்கிறார்கள்.. அவர்களுக்கு இந்த விசில் சத்தம் மேலும் எரிச்சலை கொடுக்கும்.. விசில் சத்தம் 5 முதல் 16 வயது வரை உள்ள குழந்தைகளின் படிப்பை பாதிக்கும்.. அவர்களின் கவனம் சிதறும்.. விசில் சத்தம் ஒலி மாசுபாட்டை உருவாக்கும்..
இது எல்லாமே ஆய்வுகள் சொல்லும் புள்ளி விவரம்.. எனவே கூட்டமாக சென்று தெருக்களில் விசில் அடிக்கும் போது அது மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி தவெகவுக்கு ஓட்டு போட வேண்டும் என்கிற எண்ணத்தையே மாற்றி விடும்.. தவெகவுக்கு ஓட்டு கிடைக்காமல் செய்துவிடும்.. விசில்தான் வினையே’ என அவர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.




