அரசியலுக்கு வந்தா 1600 கோடி வேணும்!. விஜய்க்கு பின்னால் இருப்பது யார்?!.. பரபர தகவல்..
Actor vijay: நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறார் என்பதுதான் கடந்த சில மாதங்களாகவே பரபரப்பு செய்தியாக ஓடிக்கொண்டிருந்தது. அடிக்கடி தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை அழைத்து அவர்களுடன் ஆலோசனை நடித்துக்கொண்டே இருந்தார். இப்போது கட்சியை தேர்தலில் கமிஷனில் பதிவு செய்யும் வேலையை அவர் துவங்கியிருக்கிறார்.
சமீபத்தில் பனையூரில் நடந்த சந்திப்பில் இது உறுதியானது. விஜய்க்கு எல்லா அங்கீகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு இதை ஒரு ஒத்திகையாகவே விஜய் பார்க்கிறார் என சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: ப்ளூ சட்டை மாறன் உடம்புக்குள்ள புகுந்த விஜய் அப்பாவோட ஆவி!.. அடேய் எல்லை மீறி போறிங்கடா!..
ஏனெனில் இதன் மூலம் தனக்கு எவ்வளவு வாக்குகள் விழுகிறது என்பதை அவர் தெரிந்து கொள்ள நினைக்கிறார். அதேநேரம், நாடாளுமன்ற தேர்தலில் விஜய் போட்டியிட வாய்ப்பே இல்லை என்றும் சொல்லப்படுகிறது. ஒருபக்கம் இன்னும் 2 வருடங்களுக்கு விஜய் சினிமாவில் நடிக்கமாட்டார் என வெளியான செய்தியும் பொய்தான் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
ஏனெனில், விஜய்க்கு 250 கோடியை சம்பளமாக கொடுப்பதற்கு தயாரிப்பாளர் தயாராக இருக்கிறார்கள். இப்போது விஜய் வருடத்திற்கு 2 படங்களில் நடிக்க துவங்கிவிட்டார். 2 வருடங்களில் 4 படங்கள் நடித்தால் அவரின் சம்பளம் 1000 கோடி. அதை வேண்டாம் என சொல்ல விஜய்க்கு எப்படி மனசு வரும்? என கேட்கிறார்கள் சிலர்.. அது உண்மையும் கூட.
இதையும் படிங்க: புஸ்ஸி ஆனந்த் ஒரு மகா முட்டாள்!. விஜய் அரசியல் வேலைக்கு ஆவாது!.. போட்டு தாக்கும் பயில்வான் ரங்கநாதன்..
அதேநேரம், அரசியலில் இறங்கினால் தொகுதிக்கு 40 கோடி செலவு செய்ய வேண்டும். இல்லையேல், வெற்றிபெற முடியாது. காசு கொடுக்காமல் மக்கள் ஓட்டு போட மாட்டார்கள். 40 தொகுதிகளுக்கு மொத்தம் 1600 கோடி வேண்டும். ஆனால், அவ்வளவு பணம் கண்டிப்பாக விஜயிடம் இருக்காது.
எனவே, விஜயை நம்பி யாரோ 1600 கோடியை முதலீடு செய்கிறார்கள் எனில் அது யார் என்கிற கேள்வியும் இயல்பாகவே எல்லோருக்கும் எழுகிறது. இதற்கெல்லாம் அரசியலுக்கு வரும் விஜய் என்ன பதில் சொல்லப் போகிறார்?.. அவரின் அரசியல் நடவடிக்கைகள் எபபடி இருக்கப்போகிறது? என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: சங்கீதாவுக்கு முன்னாடியே விஜய் வாழ்க்கையில் தென்றலாய் வீசிய பெண்! உயிர்த்தோழன் பகிர்ந்த சீக்ரெட்