Connect with us
Arjun

Cinema News

மருமகனிடம் பிடித்த விஷயங்கள் இவ்வளவு இருக்கா..? பட்டியல் போடும் ஆக்ஷன் கிங் அர்ஜூன்

நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், விநியோகஸ்தர் என பன்முகத்திறன் கொண்டவர் ஆக்ஷன் கிங் அர்ஜூன். இவரது மகள் ஐஸ்வர்யாவுக்கும், தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் 10.6.2024ல் திருமணம் நடந்தது. இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், விஷால், சமுத்திரக்கனி உள்பட பலர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர்.

ஆக்ஷன் கிங் அர்ஜூன் தனது மருமகன் உமாபதியைப் பற்றி என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா…

இதையும் படிங்க… அருண்விஜய்க்கும் சரி, இயக்குனர் பாலாவுக்கும் சரி… இது தான் கம்பேக்… அடித்துச் சொல்லும் பிரபலம்..!

தென்னாப்பிரிக்காவில் சர்வைவர் என்ற ஷோவை தொகுத்து வழங்கினேன். அதில் நிறைய போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதுல இவரும் ஒருவர். என்னமோ தெரியல. அங்க உள்ளவங்கள்ல ரொம்ப பிடிச்சவரு உமாபதி. அப்போ எல்லாம் தெரியாது. இவங்க லவ் பண்றாங்கன்னு.

எனக்கு இவரை எதுக்குப் பிடிச்சதுன்னா இவரோட எளிமை, இன்னோசன்ட், நேர்மை, எனர்ஜி, சென்ஸ் ஆப் ஹியூமர். அவர் ரொம்ப திறமையானவர். ஆக்ஷன் ஹீரோவா ஆகக்கூடிய எல்லாத் தகுதிகளும் இவருக்கு இருக்கு. கூடிய சீக்கிரத்துல நீங்க பார்க்கப் போறீங்க. டான்ஸ்னு இவருக்கிட்ட எல்லா திறமையும் இருக்கு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நான் இதுவரை நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் உங்கள் முன் நின்னுருக்கேன். ஒரு பொண்ணைப் பெத்த பிறகு அப்பனா, கட்டிக் கொடுத்த பிறகு மாமனா நிக்கிறது இன்னைக்குப் புதுசா இருக்கு. என் திரையுலக வாழ்க்கையில் ‘நன்றி’ என்ற படத்தில் 1984ல் என்னை படத்தில் ராமநாராயணன் சார் என்னை அறிமுகப்படுத்தினார். 40 வருஷமாச்சு. நிறைய ஏற்ற இறக்கங்கள் இருந்தன. இப்போது ஒரே சீராகப் போய்க்கொண்டு இருக்கிறது என்றும் முன்னதாக அர்ஜூன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க… அந்த நடிகருக்கு இவ்வளவு முக்கியத்துவமா?!. நான் நடிக்க மாட்டேன்!.. விஜய் மிஸ் செய்த சூப்பர் ஹிட் படம்!…

நடிகர் அர்ஜூனுக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என 2 மகள்கள் உள்ளனர். தற்போது மூத்த மகளுக்கு திருமணம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஐஸ்வர்யா விஷாலுக்கு ஜோடியாக பட்டத்து யானை படத்தில் நடித்துள்ளார். ஆக்ஷன் கிங் அர்ஜூன் அஜீத்துடன் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். தளபதி விஜய் உடன் இவர் இணைந்து நடித்த லியோ படமும் மாஸாக இருந்தது.

 

google news
Continue Reading

More in Cinema News

To Top