
Cinema News
கூட்டிட்டு வந்து குடிகாரனுங்க கிட்ட விட்டுட்டாங்க…! விஷால் தான் காரணம்..அனுபவத்தை பகிர்ந்த நடிகை
தமிழ் சினிமாவில் எத்தனையோ க்ளாமர் நடிகைகள் வந்து தங்கள் பெருமையை பறைசாற்றும் வகையில் நடித்து பேர் வாங்கி போயிருக்கிறார்கள். சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி போன்றோரின் பெருமைகளை இன்றளவும் சினிமா கொண்டாடி வருகின்றது.
ரசிகர்களை மகிழ்விக்கும் அவர்கள் உண்மையில் அவர்கள் படும் பாடு சொல்லிமாளாது. தங்களுக்குள் நிறைய கஷ்டங்களை மறைத்து ரசிகர்களுக்காக தங்கள் சந்தோஷங்களை தியாகம் செய்கின்றனர்.அந்த வகையில் வந்தவர் தான் நடிகை சோனா ஹெய்டன். இவர் தமிழில் ஏகப்பட்ட படங்களில் நடிக்கவும் செய்தார்.
அதே சமயம் பல ஐட்டம் பாடல்களுக்கும் ஆடவும் செய்தார். முதலில் மலையாளத்தில் தான் க்ளாமர் பாடலில் நடித்தாராம். அதை பார்த்து தான் நடிகர் விஷால் சோனாவை தன் சிலப்பதிகாரம் படத்தில் உள்ள ‘ மன்னார்குடி மனமனக்க’ பாடலுக்கு ஆட வைத்துள்ளார். நைட் சூட்டில் ஆடும் போது லைட்ஸ் எல்லாம் ஆஃப் வைத்துள்ளனர்.
இவரும் யாரும் இல்லை போல என நினைத்து சூட்டிங்கை ஆரம்பிக்க லைட்ஸ் ஆன் என சொன்னதும் சுமார் 2000 பேர் இருந்துள்ளனர் சூட்டிங்கை பார்க்க சோனாவை சுற்றி வளைத்துள்ளனர். அதில் ஏகப்பட்ட பேர் குடித்து வந்து இவரை கிண்டலும் செய்துள்ளனர். அதை பார்த்து அழுதாராம். படக்குழு இவரிடம் நாங்கள் தான் இருக்கிறோம் பயப்பட வேண்டாம் என சமரசம் செய்த பிறகு ஆட வந்தாராம். இதற்கு முதலில் விஷாலை தான் அடிக்கனும் தெலுங்கில் பார்த்து இங்கு கூட்டிட்டு வந்ததே இவர் தான் என கூறினார்.