லியோ படத்துக்கு இத்தனை தீம் மியூசிக்கா!.. அடுத்த பாட்டு ரிலீஸ் தேதியை குறித்த படக்குழு!..

விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படம் வெளியீட்டுக்கு தயாராகி விட்டது. ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி கூட இந்த மாத இறுதியில் நடக்கலாம் என்ற தகவலும் இணையத்தில் வட்டமடித்து வருகிறது.

விக்ரம் வெற்றியால் லோகேஷ் மீது பெரிய எதிர்ப்பு இருக்கும் சூழலில் லியோ வேலைகள் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கிறது. விரைவில் சென்சாரும் முடிக்கப்பட இருக்கிறது.

இதையும் படிங்க: பாகுபலியை கட்டப்பா குத்துனாலும் குத்துனாரு! எழுந்திருக்கவே முடியல – பிரபாஸை பார்த்து பயந்தோடும் திரையுலகம்

விஜயின் கதாபாத்திரம் என்னவாக இருக்கும். குந்தவை த்ரிஷா விஜய் காம்போ மீண்டும் வொர்க் ஆகுமா? வில்லன் அர்ஜூன், சஞ்சய் தத் காம்போ எப்படி தெறிக்கவிட போகிறது என ரசிகர்களிடம் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். இதில் லோகேஷ் மேஜிக் வேறு இருக்கும்.

படம் ரிலீசுக்கு முன்னரே படத்தின் வியாபாரம் 450 கோடிக்கு மேல் சென்றுள்ளது. படத்தின் வசூல் மீதும் தற்போது பலரின் கண் இருக்கிறது. 700 கோடியை தாண்டினால் தான் ஜெய்லர் வசூலை முறியடித்து சாதனை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ‘ஜவான்’ போட்ட போடு.. இன்ஸ்டாவில் நுழைந்த ரகசியம்.. சும்மா ஆடுமா குடுமி?!…

விஜய் படங்களில் முக்கிய இடம் பிடிக்கும் பாடல்கள் லியோவில் மிஸ்ஸாகுமாம். 2 பாடல்கள் மட்டுமே படத்தில் இடம்பெற இருக்கிறது. ஏற்கனவே ‘நா ரெடி’ ரிலீஸ் ஆகி ஹிட் அடித்த நிலையில் அடுத்த பாடல் செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் ரிலீஸ் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால் எதிர்பாராதவிதமாக லியோ படத்தில் 35 தீம் மியூசிக் இடம்பெற இருக்கிறதாம். முக்கிய கதாபாத்திரங்களுக்கு இந்த தீம் பயன்படுத்தப்படும். இதனால் படம் வேறு லெவல் மாஸாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜெய்லர் பாடல்களில் மாஸ் காட்டிய அனிருத் இந்த படத்துக்கு வலுவான தீமை உருவாக்கி இருப்பார் என்ற ஆர்வமும் ரசிகர்களிடம் நிலவுகிறது.

 

Related Articles

Next Story