அட...அட...என்ன ஒரு ரசனை?!....பாடல்களிலும் புதுமையைக் காட்டிய தமிழ்ப்படங்கள்...ஒரு பார்வை

by sankaran v |
அட...அட...என்ன ஒரு ரசனை?!....பாடல்களிலும் புதுமையைக் காட்டிய தமிழ்ப்படங்கள்...ஒரு பார்வை
X

Manmathan Ambu

புதுமைகளைத் தான் ரசிகர்கள் விரும்புகின்றனர் என்று தமிழ்ப்பட தயாரிப்பாளர்கள் அந்தக் காலத்தில் இருந்தே உணர்ந்து கொண்டார்கள்.

அதனால் அவ்வப்போது தமிழ்ப்படங்களிலும் ஏதேனும் ஒரு புதுமையை செய்து அதன் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்து வருகிறார்கள். அப்படி அவர்கள் செய்த புதுமையில் இது புதுமையிலும் புதுமை. வாங்க...என்னன்னு பார்க்கலாம்.

சக்கரவர்த்தி திருமகள்

Sakkaravarthi thirumagal

உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது? நெறி கெட்டுப் போன நயவஞ்சகனின் நாக்கு தானது...என்பார் எம்ஜிஆர். படம் சக்கரவர்த்தி திருமகள். ப.நீலகண்டன் இயக்கத்தில் 1957ல் வெளியானது.

கேள்வி கேட்பவர் யாருன்னு தெரியுமா? அவர் தான் கலைவாணர் என்எஸ்கே. புத்திசாலித்தனமான கேள்விகளும், அறிவுப்பூர்வமான பதில்களும் அடங்கிய பாடல் என்றால் அது இதுதான். அந்தக்கால ரசிகர்கள் மிகவும் ரசித்த பாடல்.

அக்னி நட்சத்திரம்

Akni natchathiram

மணிரத்னம் இயக்கிய அக்னி நட்சத்திரம் படத்தில் இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார். அதில் ராஜா ராஜாதி ராஜனிந்த ராஜா என்ற பாடல் செம ஹிட். அந்தப் பாடலில் ஒரு சிறப்பம்சம் உண்டு.

என்னவென்றால் அதில் கம்பி வாத்தியங்களே கிடையாது. அவற்றை உபயோகிக்காமல் பாடலுக்கு இசை அமைத்திருப்பார் இளையராஜா.

உற்று கவனித்தால் இது உங்களுக்குத் தெரியவரும். அவ்வளவு அற்புதமான இசை. அதே போல படத்தின் பின்னணி இசையிலும் வித்தியாசம் காட்டியிருப்பார் ராஜா. பின்னணி இசை முழுக்க முழுக்க ட்ரம்மிங் மற்றும் ஹம்மிங் தான்.

மௌனம் சம்மதம்

Mounam sammatham

மம்முட்டி நடித்த சூப்பர்ஹிட் படம் மௌனம் சம்மதம். இந்தப் படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். இதில் வரும் மறக்க முடியாத சூப்பர்ஹிட் பாடல் கல்யாண தேன் நிலா...காய்ச்சாத பால்நிலா...என்ற பாடல்.

இந்தப் பாடலை உற்றுக்கவனித்தால் பாடல் முடியும் வரை லா...லா...என்ற எழுத்தில் தான் முடியும். அருமையான ரைமிங் பாடல் இது.

மன்மதன் அம்பு

மன்மதன் அம்பு படத்தில் நீல...வானம் என்று ஒரு பாடல். இதைக் கமல்ஹாசன் பாடியுள்ளார். இந்தப் பாட்டைப் படமாக்குவதில் ஒரு புதுமையை செய்திருப்பார்கள்.

அதாவது பாடலில் கமலின் வாயசைப்பு முன்னோக்கி நகரும். காட்சிகள் ரிவர்ஸில் அதாவது பின்னோக்கிப் போகும். என்ன ஒரு புதுமை என்று நமக்குள் பரவசம் ஏற்படும்.

கேளடி கண்மணி

Keladi kanmani

மண்ணில் இந்தக் காதலன்றி என்ற எஸ்பிபியின் பாடலை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது. இது கேளடி கண்மணி படத்திற்காக பாவலர் வரதராஜன் பாடிய இந்தப் பாடலை எஸ்பிபி மூச்சுவிடாமல் பாடியிருப்பார்.

படத்தில் நாயகனாகவும் அவரே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வசந்த் இயக்கிய இந்தப்படம் அப்போது செம ஹிட். 200 நாள்களைத் தாண்டி ஓடி மகத்தான வெற்றி பெற்றது. இயக்குனர் வசந்த் இந்தப்படத்தில் தான் அறிமுகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story