செல்வராகவன்-சோனியா அகர்வால் விவாகரத்துக்கு கஸ்தூரிராஜா காரணமா?.. இது என்னடா புதுசா இருக்கு!…

Published on: June 30, 2023
selvaragavan
---Advertisement---

திரைப்பட இயக்குனரான செல்வராகவன் ஆரம்பத்தில் தந்தை  கஸ்தூரிராஜா இயக்கிய துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் எழுத்தாளராக பணியை துவங்கி பின் தன் தம்பியை கதாநாயகனாக காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தில் அறிமுகப்படுத்தி தன்னை ஓர் இயக்குனராக வெளிப்படுத்தினார்.

மேலும் இவர் செவன் ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களை இயக்கி இருந்தாலும் ஆயிரத்தில் ஒருவன் என்ற திரைப்படம் இவருக்கு மிக நல்ல பெயரை பெற்று தந்தது.

selvaragavan family
selvaragavan family

இச்சூழ்நிலையில் தன் தம்பியோடு இணைந்து நடித்த சோனியா அகர்வாலை இவர் காதலித்தார். முன்னணி நடிகையாக வளர்ந்து கொண்டிருந்த சோனியா அகர்வாலும்  செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் 2006 ஆம் ஆண்டு நடந்தது எனினும் 2009 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.

திருமணத்திற்கு முன்பாகவே நடிகை சோனியா அகர்வாலுக்கு மது குடிக்கும் பழக்கமும், புகை பிடிக்கும் பழக்கம் இருந்தது. எனினும் இதை யாரும் கண்டிக்கவில்லை என தெரியவந்துள்ளது.  இதனை அடுத்து திருமணத்திற்கு பிறகும் இந்த தீய பழக்கங்களை தொடர்ந்து வந்திருக்கும் இவரை இவரது மாமனாரான கஸ்தூரிராஜா இது குடும்பத்திற்கு சரி வராது இந்த பழக்கம் எங்கள் குடும்பத்திற்கு இல்லை. எனவே  அந்த தீய பழக்கங்களை விட்டு விடும்படி சோனியா அகர்வாலிடம் நேரடியாக கேட்டு இருக்கிறார்.

Sonia Agarwal
Sonia Agarwal

இதனை அடுத்து இந்த காரணத்தால் தான் செல்வராகவனுடன் சண்டை போட்ட சோனியா அகர்வால் இனி இங்கு வாழ்வது சரிவராது என்று விவாகரத்து செய்ததாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவலாக பரவி வருகிறது.

மேலும் ஒரு பேட்டியில் கஸ்தூரிராஜா தனது இரு மகன்களும் எடுப்பதுதான் இறுதி முடிவு அதில் நான் எப்போதும் தலையிடுவது இல்லை என்று கூறி இருப்பது அனைவரது நினைவிலும் இருக்கலாம்.

தற்போது செல்வராகவன் இயக்குனராக இல்லாமல் நடிகராகவும் கலக்கிக் கொண்டு இருக்கிறார். குறிப்பாக பகாசுரன் திரைப்படத்தில் இவர் நடிப்பு குறிப்பிடத்தக்கும் வகையில் இருந்ததோடு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தது என கூறலாம்.

Brindha

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.