சிகரெட் இல்லனா ஷூட்டிங் வரமாட்டேன்!...அடம் பிடிக்கும் பிரபல நடிகை

by Rohini |
sonia_main_cine
X

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ’வெளிவந்த காதல் கொண்டேன்’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். இந்த படத்தில் கல்லூரி மாணவியாக தனுஷ்க்கு ஜோடியாக நடித்திருப்பார். தனது எதார்த்தனமான நடிப்பால் இந்த படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.படம் மாபெரும் வெற்றி பெற்றது.

sonia1_cine

இந்த படத்தை தொடர்ந்து ’7ஜி ரெயின்போ காலனி’, ’கோவில்’, ’புதுப்பேட்டை’ போன்ற படங்களில் நடித்து இளசுகளின் கனவுக் கண்ணியாகவே வலம் வந்தார். இதனிடையில் 2006 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகனை திருமணம் செய்து கொண்ட சோனியா அகர்வால் இருவருக்கும் இடையேயான கருத்து வேறுபாட்டால் 2010 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்.

இதையும் படிங்கள் : சரக்க விட நீதான் அதிக போதை!….திமிரி தெரியும் அழகில் உறைய வைத்த மகேஸ்வரி….

இதன் பிறகு தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சோனியா அகர்வால் நடிக்க ஆர்வம் காட்டி வந்தார். தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் கிடைச்ச கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். சைடு ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்தார். விவேக்கிற்கு ஜோடியாக பாலக்காட்டு மாதவன் என்ற படத்தில் நடித்திருப்பார். படங்கள் ஏதும் சரியாக அமையாததால் சீரியலிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் சோனியா அகர்வால்.

sonia2_cine

இந்த நிலையில் சோனியா அகர்வாலை பற்றி பத்திரிக்கையாளரும் சினிமா நடிகருமான பயில்வான் ரெங்கனாதன் “ சோனியா அகர்வால் படப்பிடிப்பிற்கு வரும்போதே சிகரெட் பிடித்துக் கொண்டே தான் வருவார். சூட்டிங் போக மற்ற நேரங்களில் சிகரெட் பிடித்துக் கொண்டு தான் இருப்பார். படக்குழுவினர் சொன்னாலும் உனக்கு என்ன ? நான் சரியாக நடிக்கிறேனா அத மட்டும் பாரு, இதெல்லாம் சொல்லாத”னு சொல்லுவதாக பயில்வான் ரங்கனாதன் கூறினார்.

Next Story