தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் செந்தில். ஐந்தாவது வரை மட்டுமே படித்த செந்தில் சினிமாவில் வாய்ப்புகளை பெறுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டார்.
தொடர்ந்து முயற்சித்த பிறகு சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார். செந்தில் வாழ்க்கையில் முக்கியமான திரைப்படமாக அமைந்தது அவர் நடித்த மலையூர் மம்பட்டியான் திரைப்படம்.
சாதுவாக இருக்கும் செந்திலின் கதாபாத்திரம் படத்தின் கிளைமாக்ஸையே மாற்றி அமைப்பது போல அந்த படத்தில் அமைந்திருக்கும். தொடர்ந்து கவுண்டமணியுடன் சேர்ந்து பட வாய்ப்புகளை பெற்றார் செந்தில். அதற்குப் பிறகு செந்தில் பெரும் உயரத்தைத் தொட்டார் என்று கூறலாம். கவுண்டமணி செந்தில் இல்லாத படங்களே அப்போதைய காலகட்டத்தில் பார்க்க முடியாது என்கிற அளவில் தொடர்ந்து பல படங்களில் இருவரும் சேர்ந்து நடித்து வந்தனர்.
செந்திலின் ஆசை:
என்னதான் செந்தில் பெரும் சாதனைகளை செய்திருந்தாலும் கூட அவருக்கு மனதில் ஒரு குறை இருந்து கொண்டேதான் இருந்தது. செந்தில் பெரிதாக படிக்காதவர் எனவே அவரது மகன்கள் படித்து பெரிய பதவிகளை பெற வேண்டும் என ஆசைப்பட்டார் எனவே அவர்களை எக்காரணத்தை கொண்டும் சினிமாவிற்கு கொண்டு வரக்கூடாது என்று நினைத்தார் செந்தில்.
சினிமாவிற்கு வருவதன் மூலமாக பிள்ளைகளின் படிப்பு கெட்டுப் போகும் என்று நினைத்தார். எனவே இரு மகன்களுக்கும் சினிமா ஆசையே இல்லாமல் வளர்த்து அவர்களுக்கு நல்ல வேலையும் வாங்கிக் கொடுத்துள்ளார் செந்தில். இந்த விஷயத்தை பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: முதல் பாட்டுலையே தேசிய விருது வாங்கிய பாடகர்!.. ஆனா யாருக்கும் தெரியல…
நடிகை திரிஷா…
கங்குவா படம்…
நடிகர் சல்மான்…
Ajithkumar: நடிகர்…
சென்னை வானகரத்தில்…