சமூக சேவை பண்ணது ஒரு குத்தமா? சேவை செய்ததால் வில்லன் நடிகரின் படங்களுக்கு வந்த சிக்கல்....!
படங்களில் மிகவும் கொடூரமாகவும் காட்டுமிராண்டி தனமாகவும் இருக்கும் நடிகர் அல்லது நடிகை நிஜ வாழ்க்கையில் மிகவும் சாதுவாகவும் நல்ல மனிதராகவும் இருப்பார்கள். அதற்கு உதாரணம் பிரபல நடிகர் சோனு சூட் தான்.
இவர் பல படங்களில் கொடூரமான மனசாட்சியே இல்லாத வில்லனாக நடித்து மிரட்டியவர். அதிலும் குறிப்பாக அருந்ததி படத்தில் இவரின் நடிப்பை பார்க்கும் அனைவருக்கும் இவர் மீது நிச்சயம் வெறுப்பு உண்டாகும். ஆனால் இவர் நிஜ வாழ்க்கையில் வில்லன் கிடையாது. ரியல் லைஃப் ஹீரோ.
ஆம் படங்களில் வில்லனாக நடித்து மிரட்டும் சோனு சூட் நிஜ வாழ்க்கையில் பல சேவைகளை செய்துள்ளார். அதிலும் ஊரடங்கு சமயத்தில் பலருக்கும் இவர் உதவிகளை செய்து மக்கள் மனதில் ஒரு நிஜ வாழ்க்கை ஹீரோவாகவே மாறி விட்டார் என்று தான் கூற வேண்டும்.
தற்போது இவரின் இந்த ஹீரோ இமேஜ் தான் சிக்கலாக மாறியுள்ளது. ஆம் தற்போது நல்லவன் என்ற இமேஜ் ஏற்பட்டுவிட்டதால், சோனு சூட்டுக்கு வில்லன் கதாபாத்திரம் கொடுக்க மறுக்கிறார்களாம். இதுதவிர கொரோனாவிற்கு முந்தைய காலக்கட்டத்தில் ஒப்புக்கொண்ட படத்தில்கூட சோனுவை நல்லவனாக காட்ட ஒட்டுமொத்த கதையையும் மாற்றி வருகிறார்களாம்.
இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் மக்கள் இன்னும் சோனுவிடம் உதவி கேட்டு கொண்டு தான் இருக்கிறார்களாம். இதுகுறித்து சோனு கூறியதாவது, "கடந்த இரண்டு ஆண்டில் மட்டும் ஏராளமான கோரிக்கைகள் வந்துள்ளன. சில நேரங்களில் பீர் வாங்கிக்கொடுக்க முடியுமா என்று கூட கேட்கின்றனர்" என்று சிரித்து கொண்டே கூறியுள்ளார்.