Cinema News
விஜய் சேதுபதியை தூக்கிட்டு சூரிய போடு!.. வெற்றிமாறன் போட்ட ஸ்கெட்ச்!..
Actor soori: பல திரைப்படங்களிலும் காமெடி நடிகராக கலக்கியவர் சூரி. குறிப்பாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். பல திரைப்படங்களிலும் காமெடி காட்சிகளில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்.
ஆனால், விடுதலை திரைப்படம் மூலம் சூரியை ஹீரோவாக மாற்றினார் வெற்றிமாறன். அதேநேரம், வழக்கமான நடிகர்கள் போல் பில்டப் எதுவும் செய்யாமல் நடிப்பதற்கு வாய்ப்புள்ள நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து கதையின் நாயகனாக நடிக்க துவங்கி இருக்கிறார் சூரி. அப்படி அவர் நடித்து வெளியான விடுதலை படம் சூப்பர் ஹிட் அடித்தது.
இப்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. ஒருபக்கம், கொடி பட இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்து வெளியான கருடன் திரைப்படமும் நல்ல வசூலை பெற்றது. இந்த படத்தின் வெற்றி சூரிக்கு பல பட வாய்ப்புகளையும் பெற்று தந்துள்ளது.
ஏற்கனவே சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் கொட்டுக்காளி என்கிற படத்திலும் சூரி நடித்திருக்கிறார். இந்த படத்தின் டிரெய்லர் வீடியோவும் இன்று வெளியானது. மேலும், இப்படம் பல வெளிநாடுகளிலும் திரையிடப்பட்டு விருதுகளை பெற்றிருக்கிறது. இந்த திரைப்படம் வருகிற 23ம் தேதி வெளியாகவுள்ளது.
இதற்கிடையில், மேலும் 2 படங்களில் சூரியை லாக் செய்திருக்கிறார் வெற்றிமாறன். இதில் ஒரு படத்தை விடுதலை பட தயாரிப்பாளரே தயாரிக்கவிருக்கிறார். ஷெல்பி என்கிற படத்தை இயக்கிய மதிமாறன் இயக்கவிருக்கிறாராம். இது விஜய் சேதுபதி நடிக்க கலைப்புலி தாணு தயாரிக்கவிருந்த திரைப்படம்.
ஆனால், விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போவதால் அப்படத்தின் தயாரிப்பாளரை குஷிப்படுத்தவே வெற்றிமாறன் இதை செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. எப்படியோ சூரி காட்டில் அடைமழைதான்!. சூரி இப்போது ஒரு படத்திற்கு 8 கோடி வரை சம்பளம் வாங்குவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கொட்டுக்காளி படம் மட்டும் ஓடட்டும்!.. கண்டிப்பா இதை செய்வேன்!.. சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!…