Connect with us
soori_main_cine

Cinema News

அப்பாடா!.. ‘விடுதலை’ படப்பிடிப்பில் இருந்து விடுதலை ஆன சூரி!.. முடிஞ்ச கையோட செஞ்ச முதல் காரியம் என்ன தெரியுமா?..

ஒரு வழியாக விடுதலை படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து அவரவர் பேக்கப் செய்தி கிளம்பி விட்டனர். எப்படியோ படத்தை முடித்து விட்டு அந்த படத்தில் இருந்து விடுதலை ஆனார்கள் என்று தான் சொல்ல வேண்டும். வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் விடுதலை.

soori1_cine

soori

இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் விடுதலை திரைப்படத்தை முழுவதுமாக எடுத்து விட்டாராம் வெற்றிமாறன். திரைக்கு வரும் போது இரண்டு பாகங்களாக வெளியிட முடிவெடுத்திருக்கிறார்கள். முதலில் சூர் தான் ஹீரோவாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது. ஆனால் விஜய் சேதுபதி இணைய படத்தின் நிலையே மாறியது.

இதையும் படிங்க : தளபதி 67 குறித்து தெரியாத்தனமாக வாய் விட்ட மனோபாலா… ஆதாரத்தை வைத்து மிரட்டி வரும் நெட்டிசன்கள்…

இந்த படத்தில் சூரி போலீஸாக நடிக்கிறாராம். விஜய்சேதுபதி கிரிமினலாக நடிக்கிறாராம். முன்பு வந்த தகவல் படி முதல் பாகத்தில் சூரியை ஹீரோவாகவும் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியை ஹீரோவாகவும் காட்டுவது மாதிரியான அடிப்படையில் காட்சிகளை வெற்றிமாறன் எடுத்திருக்கிறார் என்ற தகவல் வெளியானது.

soori2

soori2

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்புதான் படப்பிடிப்பு முடிந்து நடிகர் சூரி சொந்த ஊரான மதுரைக்கு சென்று விட்டாராம். போனவர் ஹோட்டல் கடை நிர்வாகத்தை பார்க்க போயிருக்கிறார் என்று பார்த்தால் சத்தமே இல்லாமல் மற்றுமொரு படத்தின் படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டாராம். அதுவும் அந்த படத்திலும் சூரிதான் ஹீரோவாம்.

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் தான் இந்த படம் உருவாக இருக்கிறதாம். ஏற்கெனவெ கூழாங்கல் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் தான் சூரியின் இந்த படத்தையும் இயக்க போகிறாராம். இந்த திட்டம் முன்னதாகவே போட்ட திட்டமாம். அதுவும் சிவகார்த்திகேயன் ஏற்கெனவே சூரியை ஹீரோவாக வைத்து படம் எடுக்க வேண்டும் என எண்ணியிருந்தாராம். அதன் காரணமாகவே சூரி விடுதலை படம் முடிந்த கையோடு சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தில் நடிக்க சென்று விட்டாராம்.

soori3

soori sivakarthkeyan

google news
Continue Reading

More in Cinema News

To Top