Cinema News
பக்கா மாஸ்டர் ப்ளான்! சூரி – விஷ்ணுவிஷால் இணைந்ததுக்கு பின்னாடி இவ்ளோ விஷயம் இருக்கா?
Soori Vishnu Vishal: நேற்று திடீரென விஷ்ணு விஷாலும் சூரியும் இணைந்து இருக்கிற புகைப்படம் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படவைத்தது. ஆனால் இது பற்றி ஏற்கனவே விஷ்ணு விஷால் கூடிய சீக்கிரம் நாங்கள் இணைவோம். எல்லா பிரச்சினையும் முடிவுக்கு வந்துவிட்டது என்று பேட்டியில் கூறியிருந்தார். அவர் சொன்னதை போலவே விஷ்ணு விஷால் அவருடைய தந்தை ரமேஷ் குடவாலா மற்றும் சூரி ஆகிய மூவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அந்த புகைப்படம் வெளியானதில் இருந்து எப்படி இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது? இந்த பிரச்சினையில் அதிகளவு பாதிக்கப்பட்டது சூரி. அப்படி இருந்தும் எப்படி மீண்டும் சேர்ந்தார் என்ற கேள்விகள் ரசிகர்கள் மனதில் எழுந்தது. சூரியை ஒரு நிலத்தகராறு பிரச்சினையில் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா ஏமாற்றிவிட்டதாகவும் அதனால் அவருடைய பெரும் பணம் பறிபோனது என்றும் சூரி போலீஸில் புகார் அளித்தார்.
இதையும் படிங்க: இவன்தான் என் ஹீரோ!. இல்லனா படமே வேண்டாம்!.. பாரதிராஜா சொன்னதன் பின்னணி இதுதான்!..
இந்தப் பிரச்சினை திரையுலகினர் மத்தியில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் சூரியும் விஷ்ணு விஷாலும் மிக நெருங்கிய நண்பர்கள். இவர்களுக்கிடையில் இப்படி ஒரு பிரச்சினை இருக்கிறதா என்று அதிர்ச்சியாகினார். சரி எப்படி இணைந்தார்கள் என்பதை பற்றி வலைப்பேச்சு பிஸ்மி ஒரு பேட்டியில் கூறினார். இந்த விஷயத்தில் விஷ்ணு விஷால் தஞ்சமடைந்தது உதய நிதிக்கு நிழலாக இருக்கும் செண்பகமூர்த்தியிடம்தானாம்.
அதனால் சூரி எங்கு போனாலும் யாரை பார்த்து புகார் கொடுத்தாலும் அவருக்கு சாதகமாக அமையவில்லை. அதனால் உதயநிதி தலையிட்டு சூரிக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுக்க வைத்து இந்த பிரச்சினையை அப்படியே முடித்து வைத்திருப்பார் என வலைப்பேச்சு பிஸ்மி கூறினார். ஆனால் சூரியின் பக்கம் நின்று பார்த்தால் அவர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை அப்படியே இந்த நிலத்திற்காக போட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: யேசுதாஸை வென்று காட்டிய ஜெயச்சந்திரன்!.. பலருக்கும் தெரியாத பாடகரின் மறுபக்கம்!..
மேலும் ஒரு சில நண்பர்களிடம் சூரி ஒரே துறையில் இருக்கிறோம். ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமல் கடந்து போக முடியாது. அதனால் பிரச்சினையை எல்லாம் மறந்து மீண்டும் சேர்வதாக இருக்கிறேன் என்று கூறியதாக வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்தார்.