நடிகையை பிசாசுனு சொன்ன சூரி.. பர்ஷனலாக சொன்னதை அம்பலப்படுத்திய மாரிசெல்வராஜ்

soori
Soori: ஒரு காமெடியனாக இருந்து இன்று மாஸ் ஹீரோவாக மாறி இருக்கிறார் நடிகர் சூரி. காமெடி மட்டுமே வரும் என்ற எண்ணத்தை மாற்றி நடிப்பும் எனக்கு அத்துபிடி என்பதை சமீபகாலமாக நிரூபித்து வருகிறார் சூரி. வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் காமெடியனாக அறிமுகமான சூரி தொடர்ந்து தன்னுடைய நகைச்சுவையால் மக்களை ரசிக்க வைத்து வந்தார்.
அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் இவர்தான் லீடு காமெடியனாக நடித்து வந்தார். வடிவேலு விவேக் சந்தானம் இவர்களுக்கு அடுத்தபடியான வரிசையில் சூரி தான் இருந்தார். அவருடைய எதார்த்தமான நடிப்பும் பேச்சும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. திடீரென அவருக்குள்ளும் ஒரு நல்ல நடிகன் ஒரு நல்ல ஹீரோ இருக்கிறான் என்பதை வெளிக்கொண்டு வந்தவர் வெற்றிமாறன் .
விடுதலை படத்தில் அதை சாதித்து காட்டினார் வெற்றிமாறன். அதற்கு ஏற்ப சூரியும் தனக்கு ரொமான்ஸ் வரும் நடிப்பும் வரும் எமோஷனலாகவும் நடிக்க தெரியும் என்பதை ஹீரோவாக நடித்த அந்த முதல் படத்திலேயே வெளிப்படுத்தினார். அதிலிருந்து தொடர்ந்து ஹீரோவாகவே இப்போது நடித்து வருகிறார். அவருடைய நடிப்பில் மே 16ஆம் தேதி ரிலீசாக கூடிய திரைப்படம் மாமன்.
இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் தான் நடைபெற்றது. இந்த விழாவிற்கு திரையுலகை சார்ந்த பலரும் கலந்துகொண்டு சூரியை வாழ்த்தினார்கள். பல இயக்குனர்களும் வந்திருந்தார்கள் .அந்த வகையில் இயக்குனர் மாரி செல்வராஜ் மேடையில் பேசும்பொழுது ட்ரெய்லரை நானும் சூரியும் பார்த்துக் கொண்டிருந்தோம் .

அப்போது சூரிக்கு அக்கா கேரக்டரில் சுவாசிகா நடித்திருப்பார் .அதைப்பற்றி சூரியிடம் அந்த அக்கா கேரக்டர் என்று தான் ஆரம்பித்தேன். அதற்குள் சூரி அதுவா அந்த பொண்ணு பிசாசுங்க. நடிப்பு அரக்கி. இந்த தமிழ் சினிமா இருக்கும் வரை அந்த பொண்ணு கண்டிப்பா நடிக்கும். அப்படி ஒரு எதிர்காலம் அந்த பொண்ணுக்கு இருக்கிறது என கூறினாராம் சூரி.