மருத்துவமனையில் சூரி...! இப்படி ஒரு நிகழ்வா...? பரபரப்பில் ரசிகர்கள்..!
தமிழ் சினிமாவில் வடிவேலு, விவேக் இவர்களின் வரிசையில் காமெடியில் கலக்கி வருபவர் நடிகர் சூரி. இவர் தற்போது கதாநாயகனாக அவதாரம் எடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். கூடவே விஜய் சேதுபதியும் நடிக்கிறார்.
படம் இறுதிகட்ட படப்பிடிப்பை நெருங்கிய நிலையில் திடீரென மதுரை அரசு மருத்துவமனையில் நடிகர் சூரி வந்திருப்பதாக தகவல் வெளியானது. ஏற்கெனவே மதுரைக்கு சொந்தக்காரரான சூரி அங்கு அம்மன் ரெஸ்டாரண்ட் என்ற பெயரில் ஓட்டலை வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார்.
இது இப்போது அரசு காதுக்கு செல்ல அரசு மருத்துவமனையில் உள்ள ஊழியர்களுக்கும் நோயாளிகளுக்கும் தரமான மலிவான விலையில் சாப்பாடு கிடைக்க நடிகர் சூரியை அணுகியதாக தெரிகிறது.
இதற்கு சூரியும் சம்மதம் தெரிவித்து மருத்துவமனையில் கேண்டீனாக அமைக்க திட்டமிட்டு அது விஷயமாக மதுரைக்கு வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் மருத்துவமனையில் கேண்டீனை திறந்து வைத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய சூரி நோயாளிகளுக்கு தரமான சாப்பாடு வழங்க எனக்கு இந்த வகையில் வாய்ப்பு கொடுத்த அமைச்சருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றி என தெரிவித்தார்.