Categories: latest news

கருடனா?.. காக்காவா?.. சூரியின் ஹீரோ முயற்சி கை கொடுத்ததா?.. கருடன் பட விமர்சனம் இதோ!..

யாருமே இல்லாமல் பசியால் தவித்து வரும் சொக்கனுக்கு (சூரி) அடைக்கலம் அளித்து உணவு கொடுக்கிறார் கர்ணா (உன்னி முகுந்தன்). அதன் பின்னர் அவருக்கு விசுவாசியாகவும் வலது கையாகவும் யாரை கை காட்டி என்ன சொல்கிறாரோ அதை செய்யும் நன்றியுள்ளவராக சூரியை வைத்திருக்கிறார் உன்னி முகுந்தன். ஆதி கதாபாத்திரத்தில் நடித்துள்ள சசி குமாரும் உன்னி முகுந்தனும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள்.

எந்தவொரு வேலையையும் இருவரும் ஒன்றாக இணைந்து பார்த்து வருகின்றனர். செங்கல் சூளை, லாரி பிசினஸ், கோயில் நிலங்களை பராமரிப்பது என பல விஷயங்களை இணைந்து பார்த்து வரும் இருவரது நட்புக்கும் இடையே பெரிய சிக்கலை அரசியல்வாதியான ஆர்.வி. உதயகுமார் செய்கிறார்.

இதையும் படிங்க:  பேர் சொல்லி கூப்பிட்டதற்கு சந்திரமுகியாக மாறிய தேவயானி! வேட்டையன் ரூபத்தில் அடக்கிய மணிவண்ணன்

உன்னி முகுந்தனுக்கு ஏகப்பட்ட கெட்டப் பழக்கங்கள் உள்ள நிலையில், அவரது வீக்னஸை வைத்து விளையாடும் போலீஸ் சமுத்திரகனியால் பிரச்சனை வெடிக்க சூரியின் விசுவாசமே ஒரு கட்டத்தில் கேள்விக்குறியாக மாறுகிறது.

இடைவேளை காட்சியில் தான் சூரி ஹீரோவாகவே இந்த படத்தில் மாறுகிறார். அதுவரை அண்டர் டாக் கதாபாத்திரம் தான் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ரேவதி சர்மாவை காதலிப்பது, டூயட் பாடுவது என வழக்கமான கமர்ஷியல் மசாலாக்கள் இருந்தாலும், அதிகமாக பாடல்கள் வந்து ரசிகர்களை டார்ச்சர் செய்யாமல் படத்தின் கதைகளுக்குள் ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகளை வைத்தும் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் ஹைலைட் செய்தும் டம்மி செய்தும் இடைவேளைக்கு பிறகு சூரியின் அதிரடி ஆட்டத்தை காட்டியும் ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வந்து படத்தை பார்க்கும் ஆர்வத்தை திரையில் கொடுத்திருக்கிறார் துரை செந்தில்குமார்.

இதையும் படிங்க:  சொத்தை விற்று கில்லி படத்தை ரிலீஸ் செய்த தயாரிப்பாளர்… அப்படி என்ன சோதனை?

எதிர்நீச்சல், காக்கிச் சட்டை, கொடி மற்றும் பட்டாஸ் படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் ரொம்ப நாளா ஆளே காணோமே என நினைத்த ரசிகர்களுக்கு மீண்டும் கம்பேக் கொடுத்திருக்கிறார். விடுதலை படத்தை தொடர்ந்து சூரிக்கு ஹீரோவாக மாஸ் காட்ட கருடன் படம் அனைத்து ஏரியாவிலும் வொர்க்கவுட் ஆகியிருக்கிறது.

இந்த வாரம் வெளியான ஹிட் லிஸ்ட் மற்றும் கருடன் படங்களில் கருடன் படமே ரசிகர்களை அதிகம் கவரும் வண்ணம் உள்ளது. சூரி சொக்கனாக வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

இதையும் படிங்க:  கோலிவுட்டிலே நிறைய கிடக்கு… இதுல இந்த புது உருட்டு தேவையா? தனுஷின் அடுத்த பட அறிவிப்பு…

கருடன் – விசுவாச காவலன்!

ரேட்டிங் – 3.5/5.

Saranya M

Recent Posts

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

2 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

14 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

15 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

15 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

17 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

23 hours ago