சந்தானத்துடன் சரியான போட்டிப் போடும் சூரி!.. மாமன் பட ட்ரெயிலர் எப்படி இருக்கு?..

லார்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள மாமன் திரைப்படத்தின் ட்ரெயிலர் இன்று உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், மாமன் வருகிற மே 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா சூரியாக பிரபலமான இவர் பூஜை, பசங்க 2, ரஜினி முருகன், அரண்மனை, மருது, சிங்கம் 3 போன்ற பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். விடுதலை 1ல் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் சூரி கொட்டுக்காளி, கருடன், விடுதலை 2 என தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார்.
மாமன் படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி, அக்காவாக ஸ்வாசிகாவும், தந்தையாக நடிகர் ராஜ்கிரண் மேலும், பால சரவணன், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

மே1ம் தேதி உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டி வெளியான மாமன் பட ட்ரெயிலரில் சூரி தனது அக்காவின் குழந்தையை வயிற்றிலிருக்கும் போது என்னை பெத்தாரே என அழைத்து பிறந்த பிறகு, அவனை கையில் வாங்கி ஒரு மாமனாக என்னென்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்து சில ஆண்டுகளில் குடுப்ப தகராறு காரணங்களால் அந்த குழந்தையை காண ஏங்கும் மாமனாக தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் சூரி.
சூரியின் மாமன் திரைப்படம் வருகிற மே 16ம் தேதி வெளியாக உள்ளது. அனைவரும் பார்த்து ரசிக்க ஒரு நல்ல குடும்பப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், சூரி அடுத்ததாக புகழேந்தி மதிமாரன் இயக்கத்தில் மண்டாடி என்ற படத்தில் நடித்து வருறார். சமீபத்தில் அப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருந்தனர்.
சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ட்ரெயிலர் நேற்று வெளியாகி வைரலான நிலையில், சபாஷ் சரியான போட்டி என சூரியின் மாமன் ட்ரெயிலர் இன்று வெளியாகி உள்ளது. இரண்டு படங்களும் மே 16ம் தேதி கல்லா கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.