மதுரையில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த சூரி, சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்து, பெயிண்டர், ஆர்ட் அசிஸ்டன்ட் போன்ற சின்ன சின்ன வேலைகளை செய்திருக்கிறார். கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கும் மேல் கஷ்டப்பட்டிருக்கிறார். பல நேரங்களில் கையில் காசு இல்லாமல் பசியோடு மயங்கி விழுந்திருக்கிறார்.
எப்படியாவது சினிமாவுக்குள் போய்விட வேண்டும் என்ற குறிக்கோள்தான் அவரிடம் இருந்த ஒரே நம்பிக்கை. அந்த சமயத்தில் “காதலுக்கு மரியாதை”, “சங்கமம்”, “கண்ணன் வருவான்”, “ரெட்”, “வின்னர்” போன்ற பல திரைப்படங்களில் சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார்.
இதனைத் தொடர்ந்துதான் அஜித்குமாரின் “ஜீ” திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது. அத்திரைப்படத்தை இயக்கியவர் லிங்குசாமி. அவரிடம் எழில் உதவியாளராக பணிபுரிந்திருக்கிறார். அப்போது எழிலுக்கும் சூரிக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து எழில் இயக்கிய “தீபாவளி” திரைப்படத்தில் சூரி நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது.
அப்போது எழிலிடம் சுசீந்திரன் உதவி இயக்குனராக பணியாற்றிக்கொண்டிருந்தார். அந்த தருணத்தில் சுசீந்திரனுக்கும் சூரிக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவ்வாறுதான் சுசீந்திரன் இயக்கிய, “வெண்ணிலா கபடிக் குழு” திரைப்படத்தில் காமெடியனாக வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதில் அவர் ஏற்று நடித்திருந்த “புரோட்டா” சூரி கதாப்பாத்திரம் மிகப் பிரபலமான கதாப்பாத்திரமாக அமைந்தது.
அதில் இருந்துதான் சூரியின் வளர்ச்சியே தொடங்கியது. இவ்வாறு அஜித் திரைப்படத்தில் நடித்ததில் இருந்து சூரியின் கிராஃப் எகிறியிருக்கிறது. தற்போது “விடுதலை” திரைப்படத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். இவரது வளர்ச்சி பிரம்மிக்கவைக்கும் வளர்ச்சியாக இருக்கிறது.
இசை அமைப்பாளர்,…
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…