காண்டாகிய சூரி..! சூட்டிங்கில் நடந்த ரகளை..! விடாமல் துரத்தும் பிரச்சினை...
செந்தில், கவுண்டமணி, வடிவேல், விவேக் இவர்கள் வரிசையில் தற்போது தமிழ் சினிமாவை தன் எதார்த்தமான நகைச்சுவையால அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்துக் கொண்டிருப்பவர் நடிகர் சூரி.
வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் பரோட்டா சாப்பிட்டதில் இருந்து பரோட்டா சூரி என்ற பட்டப்பெயருடன் சுற்றிக் கொண்டு இருந்த சூரி தொடர்ந்து பல படங்களின் வெற்றிக்கும் காரணமாக இருந்தது இவரின் நகைச்சுவை. மதுரை தமிழில் பேசும் இவர் வசனங்கள் கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.
இவர் தற்போது முதன் முறையாக ஹீரோவாக வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் வெளியான விருமன் படத்திலும் இவரின் நகைச்சுவை அனைவரையும் சுவைக்க வைத்தது. இந்த நிலையில் அந்த படத்தின் ஹீரோயினான அதீதி சங்கரால் சூரி மிகவும் துன்புறத்தப்பட்டதாக தெரிகிறது.
அதாவது அதீதி தனது மொக்க ஜோக்குகளால் படக்குழுவினரை காண்டாக்கியுள்ளார். ஒரு கட்டத்தில் இவரின் கடி ஜோக்குகளை தாங்க முடியாத நடிகர் சூரி தயவுசெய்து சூட்டிங்கை ரத்து செய்து விடுங்கள். நான் என் ஊருக்கே போய்விடுகிறேன் என நகைச்சுவையாக கூறியதாக அந்த படத்தில் நடித்த ரோபோ சங்கரின் மகள் கூறினார்.