சூரியின் அடுத்தடுத்த கமிட்டுகளால் ஆடிப்போன ரசிகர்கள்.. வேற லெவல் அண்ணே நீங்க!..
தமிழ் சினிமாவில் எப்படி சத்யராஜ் கவுண்டமணி காம்போ ஒரு வெற்றி காம்போவாக இருந்ததோ அதே போல சிவகார்த்திகேயன் சூரி காம்போ மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆரம்பகாலத்தில் இருந்து சிவகார்த்திகேயன் படங்களில் சூரியை பார்க்கமுடிந்தது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா போன்ற படங்களில் இவர்களின் நகைச்சுவை ரசிக்கும் படியாக இருந்தது.
இப்போது சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்து முடித்திருக்கிறார். முடித்த கையோடு சூரியின் அடுத்த ப்ளான் என்னவாக இருக்கும்? ஒருவேளை சந்தானம் வழியை பின்பற்றுவாரா? இல்லை பழையபடி நகைச்சுவையில் இறங்குவாரா? என்ற கேள்வி இருந்து வந்தது.
இதையும் படிங்க : படத்தை பார்த்து பாராட்டிய அஜித்!.. நெகிழ்ச்சியை வெளிப்படுத்திய ‘வாரிசு’ பட நடிகர்.. என்னடா நடக்குது?..
நினைத்தப்படி சூரி தன் அடுத்தப்படத்திலும் ஹீரோவாகவே களம் இறங்குகிறார். அதுவும் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் தான் நடிக்க இருக்கிறாராம். அதன் படப்பிடிப்பு முழுவீச்சில் மதுரையில் நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியானது. அதனால் தான் விடுதலை படத்தின் படப்பிடிப்பு முடித்த கையோடு மதுரை புறப்பட்டு சென்று விட்டார் சூரி.
இந்த நிலையில் மற்றுமொரு தகவல் என்னவெனில் இந்த படத்திற்கு பிறகும் சூரி அடுத்த படத்திலும் ஹீரோவாகவே களம் இறங்குகிறாராம். மதயானை கூட்டம் படத்தின் இயக்குனர் தான் இந்த படத்தை இயக்க இருக்கிறாராம். இந்த படத்தை தயாரிக்கப்போவதும் கிட்டத்தட்ட சிவகார்த்திகேயனாக கூட இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் சிவகார்த்திகேயனின் நண்பரும் மாவீரன் படத்தை தயாரிப்பவருமான அருண் விஷ்வா தான் இந்த படத்தை தயாரிக்கப் போகிறாராம். அதனால் தான் இதுவும் கிட்டத்தட்ட சிவகார்த்திகேயன் படமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
இதன் மூலம் தொடர்ந்து மூன்று படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை பெற்ற சூரி எப்படி இனி காமெடியனாக ஜொலிப்பார் என்று சிலர் பேசிவருகிறார்கள். ஏற்கெனவே சந்தானம் தனி ரூட்டை பிடித்து காணாமல் போய்விட்டார். இப்போது அடுத்ததாக சூரியும் களம் இறங்குகிறார். சூரியின் காமெடி சீன்கள் ரசிகர்களுக்கு ரசிக்கும் படியாக இருக்கும். அவரும் போய்விட்டால் நிலைமை என்ன ஆகும் என ரசிகர்கள் புலம்பிவருகின்றனர். இது ஒரு புறம் இருந்தாலும் நல்ல கதை அமைந்தால் அவரின் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.