நடிச்சா ஹீரோதான்.! அடுத்தடுத்து அட்டகாசம்.! விண்ணை முட்டும் சூரியின் வளர்ச்சி.!

by Manikandan |
நடிச்சா ஹீரோதான்.! அடுத்தடுத்து அட்டகாசம்.! விண்ணை முட்டும் சூரியின் வளர்ச்சி.!
X

வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் பரோட்டா சூரியாக அறிமுகமாகி அதற்கு அடுத்து தனது தனித்துவமான கிராமத்து காமெடிகள் மூலம் நல்ல காமெடி நடிகராக வலம் வருகிறார் சூரி.

இருந்தாலும் அவரது காமெடிகள் ஒரே மாதிரி இருக்கின்றது என்று நெட்டிசன்கள் அவரை அவ்வப்போது வசைபாடுவார்கள். இருந்தாலும் அதனை கண்டுகொள்ளாமல் அடுத்தடுத்த படிகளை நோக்கி முன்னேறி கொண்டிருக்கிறார் நடிகர் சூரி.

இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை எனும் திரைப்படத்தில் முதன்மை கதாநாயகனாக நடித்து வருகிறார். இவருடன் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காமெடி நடிகராக இருந்துகொண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் நாயகனாக நடிப்பதால் அவருக்கு தற்போது மவுசு கூடியுள்ளது.

இதையும் படியுங்களேன் -தளபதி விஜய் நடிப்பில் அமீர் இயக்கத்தில் ‘கண்ணபிரான்’.! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.!

இதனை அடுத்து இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நாயகனாக நடிக்கும் ஒரு படத்தில் முக்கிய வேடத்தில் சூரி நடிக்கிறார். அதன் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதுபோக தற்போது பருத்திவீரன் இயக்கிய அமீர் ஒன்பது வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு புதிய படத்தை எடுக்கிறார். அந்த திரைப்படத்திற்கு இறைவன் மிகப்பெரியவன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் சூரி முதன்மை நாயகனாக நடிக்கிறார்.

அடுத்தடுத்து முக்கிய இயக்குனர்கள் படத்தில் முக்கிய வேடங்களில் சூரி நடித்து வருகிறார். இது அவரது திரை உலகில் அசுர வளர்ச்சியான பார்க்கப்படுகிறது. இதுபோல மேலும் பல திரைப்படங்களில் சூரி நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story