Connect with us

Cinema News

அவர் சகவாசமே வேணாம் ஆள விடுங்க!…கும்பிடு போட்டு தெறித்து ஓடிய சூரி…!

தமிழ் சினிமாவுக்கு தரமான படங்களை களமிறங்கிய இயக்குனர் வெற்றிமாறன். அசுரன் மாபெரும் வெற்றிக்கு பிறகு எந்த பெரிய ஹீரோவை வெற்றிமாறன் இயக்குவார் என எதிர்பார்த்திருந்த வேளையில், சூரி நாயகனாக நடிக்கும் விடுதலை படத்தை இயக்க உள்ளதாக அறிவித்தார் வெற்றிமாறன்.

அதில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு, கொரோனா காரணமாக ஷூட்டிங் நீண்டு கொண்டே போனது. கிட்டத்தட்ட இதன் ஷூட்டிங் 2 வருடங்கள் ஆகியும் நீண்டு கொண்டு தான் இருக்கிறது.

போலீஸ் வேடத்தில் நடிக்கும் சூரி அதற்காக முடி வெட்டாமல், தாடி வைக்காமல், அதே கெட்டப்பில் இருந்து வந்தார். அதனாலேயே பல பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்காமல் தட்டி சென்றதாம்.

இதையும் படியுங்களேன் – தனுஷ்னா யாருனே தெரியாது.., அடுத்து என்ன செஞ்சிருக்காருனு பாருங்க.., மிரண்டு போன ஹாலிவுட் பிரபலம்.!

வெற்றிமாறன் படம் , அதுவும் சிறிய பட்ஜெட் படம் என நினைத்தால் இப்படி ஆகிவிட்டதே என சூரி தனது நெருங்கிய வட்டாரத்தில் புலம்பி வந்தாராம் . தற்போது சூரி சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிந்துவிட்டதாம். இதனால், சூரி செம ஹேப்பியாம். உடனடியாக கெட்டப்பை மாற்ற உள்ளாராம் சூரி. இந்த இரண்டு வருடம் விட்ட வாய்ப்பை மீண்டும் பிடிக்க சூறாவளியாய் சுழன்று நடிக்க உள்ளாராம் சூரி.

google news
Continue Reading

More in Cinema News

To Top