யாரும் கூப்பிட மாட்றாங்க!.. மேடையில் புலம்பிய சூரி!.. இதுதான் காரணமா?!….

by சிவா |   ( Updated:2025-04-28 02:13:12  )
soori
X

தமிழ் சினிமாவில் போராடி மேலே வந்தவர் சூரி. மதுரையிலிருந்து சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்த இவர் வயிற்றுப்பசிக்காக பெயிண்ட் அடிப்பது, சுண்ணாம்பு அடிப்பது, எலக்ட்ரீசியன் வேலை செய்வது என பல வேலைகளையும் செய்திருக்கிறார். சில சமயம் 3 நாட்கள் கூட சாப்பிடாமல் இருப்பாராம்.

அப்படி கஷ்டப்பட்ட இவருக்கு போண்டா மணி, லொள்ளு சபா எஸ்தர் போன்ற பலரும் உதவி செய்திருக்கிறார்கள். படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கினார். ஹீரோக்களின் நண்பர்களில் ஒருவராக வருவார். சுசீந்திரன் இயக்கத்தில் உருவான வெண்ணிலா கபடிக்குழு படத்தில் சூரி பரோட்டா சாப்பிடும் காமெடி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற ரசிகர்கள் இவரை பரோட்டா சூரி என அழைத்தனர்.

அதன்பின் பல படங்களிலும் காமெடியனாக நடித்தார். குறிப்பாக சிவகார்த்திகேயனுக்கும், சூரிக்கும் இடையேயான காம்போ நன்றாகவே வொர்க் அவுட் ஆனது. குறிப்பாக வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களில் இருவரும் சேர்ந்து ரசிகர்களை சிரிக்க வைத்தார்கள்.

soori

இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை படம் மூலம் சூரியை வேறு மாதிரி காட்டினார். காமெடியில் கலக்கி வந்த சூரியை கதையின் நாயகனாக மாற்றிவிட்டார். இந்த படம் ஹிட் அடிக்கவே சூரி தொடர்ந்து ஹீரோவாக மாறினார். கொட்டுக்காளி, கருடன் போன்ற படங்களில் நடித்தார். இதில் கருடன் சூப்பர் ஹிட் ஆனது.

இப்போது மாமன், மண்டாடி போன்ற படங்களில் நடித்து வருகிறார். சூரி இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிப்பர் என எல்லோரும் சொல்கிறார்கள். சூரியும் அந்த முடிவில் இருப்பதாகவே செய்திகள் வெளியானது. இந்நிலையில்தான், தன்னை காமெடி வேடத்தில் நடிக்க யாரும் கூப்பிடுவதில்லை என சூரி பேசியிருக்கிறார்.

வெற்றிமாறன் அண்ணன் ஒருமுறை என்னிடம் ‘சூரி. வருஷத்துக்கு ஒரு படம் காமெடியும் பண்ணுங்க. ஹீரோவும் பண்ணுங்க’ என சொன்னார். விடுதலை படத்துக்கு அப்புறம் அவரே ‘வாய்ப்பில்ல சூரி.. இனிமே உங்கள காமெடிக்கு யாரும் கூப்பிட மாட்டாங்கன்னு சொன்னாரு.. அவர் சொன்ன மாதிரி நானும் பாக்குறேன்.. ஒருத்தர் கூட காமெடி ரோலில் நடிக்க கூப்பிட மாட்றாங்க’ என பேசியிருக்கிறார்.

Next Story