விடுதலை 2-வுக்கு பிறந்த விடிவுகாலம்!.. படம் ரிலீஸ் எப்போ தெரியுமா?!. அட சூரியே சொல்லிட்டாரே!..
தமிழ் சினிமாவில் முக்கிய மதிக்கத்தக்க இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். பாலுமகேந்திராவின் சீடர் இவர். இவர் இயக்கிய முதல் படமான பொல்லாதவன் பல இயக்குனர்களுக்கும் பிடித்திருந்தார். அதன்பின் ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என அடித்து ஆடினார்.
இதில், ஆடுகளம் மற்றும் அசுரன் ஆகிய 2 படங்களுக்கும் தனுஷுக்கு தேசிய விருதே கிடைத்தது. எனவே, சிறந்த இயக்குனராக வெற்றிமாறன் பார்க்கப்பட்டார். அவரின் இயக்கத்தில் நடிக்க பெரிய நடிகர்களே ஆர்வம் காட்டினார்கள். விஜய், அஜித், ரஜினி ஆகியோரும் வெற்றிமாறனிடம் கதை கேட்டார்கள்.
இதையும் படிங்க: அர்ஜூன் வீட்டு திருமணத்தில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? மூணு நாளைக்கு ஒரே ஆட்டம்தான் போங்க
சூரியை வைத்து வெற்றிமாறன் இயக்கிய திரைப்படம்தான் விடுதலை. அதிகாரத்திற்கு எதிராக போராடும் போராட்டக்குழு பற்றிய கதை. இதில், சூரியை காவல்துறை அதிகாரியாக நடிக்க வைத்திருந்தார் வெற்றிமாறன். கதாபாத்திரத்தை புரிந்து மிகவும் கச்சிதமாக நடித்திருந்தார் சூரி.
இளையராஜாவின் இசையில் உருவான இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. சூரி கதையின் நாயகனாக நடித்த முதல் படமே வெற்றி என்பதால் இயக்குனர்களின் பார்வை சூரி பக்கம் திரும்பியது. ஒருபக்கம் விடுதலை 2 படமும் உருவானது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு வருடத்திற்கும் மேல் நடந்து வருகிறது.
இதையும் படிங்க: நாங்க கேட்டது.. ஆனால் வந்தது! அஜித்துக்கு போட்டியாக களமிறங்கும் சூர்யா.. இத எதிர்பார்க்கல
எடுத்த காட்சி திருப்தி இல்லாமல் மீண்டும் எடுப்பது, சில காட்சிகள் விசாரணை படம் போலவே இருந்ததால் அந்த காட்சிகளை மீண்டும் எடுத்தது என பல நாட்கள் படப்பிடிப்பு நடத்தினார் வெற்றிமாறன். இந்த படம் எடுக்கும்போது விட்ட இடைவெளியில் சூரி கருடன் என்கிற படத்திலேயே நடித்து முடித்துவிட்டார். இந்த படமும் சூரிக்கு ஒரு ஹிட் படமாக அமைந்திருக்கிறது.
இந்நிலையில், விடுதலை 2 படம் ஆகஸ்டு மாதம் வெளியாகும் என ஊடகம் ஒன்றில் சொல்லி இருக்கிறார் சூரி. இந்த செய்தி சூரி, விஜய் சேதுபதி மற்றும் வெற்றி மாறனின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.