இவரே சோலிய முடிச்சுருவார் போலயே! வாண்ட்டடா போய் பாதாளத்தில் விழும் சூரி

by Rohini |   ( Updated:2023-09-06 10:30:11  )
soori
X

soori

Actor Soori: தமிழ் சினிமாவில் சூரி ஒரு நகைச்சுவை நடிகராக அடியெடுத்து வைத்தார். வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் அந்த பரோட்டா காட்சியில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பரீட்சையமானார் சூரி. அதிலிருந்தே பரோட்டா சூரி என்று அழைக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து பல படங்களில் ஹீரோவுக்கு நண்பனாக தன் அசத்தலான காமெடி மூலம் மக்களை ரசிக்க வைத்தார். அனைத்து முன்னனி நடிகர்களுடனும் சேர்ந்து நடித்த சூரிக்கும் ப்ளஸாக அமைந்தது அவரது மதுரை பேச்சுத்தான்.

இதையும் படிங்க : ரெண்டு பக்கமும் குத்துனா எப்படி தாங்குறது… #Boycottjawan ட்ரெண்டாகும் ஹாஸ்டேக்!

மிகவும் எதார்த்தமாக பேசி நகைச்சுவை செய்வதில் சூரிக்கு நிகர் சூரிதான். இப்படி நகைச்சுவை மன்னனாகவே வலம் வந்த சூரியை ஹீரோவாக்கி பார்க்க ஆசைப்பட்டார் இயக்குனர் வெற்றிமாறன். விடுதலை படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்து அவருக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தினார் வெற்றிமாறன்.

விடுதலை படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றிப் பெற்றதை அடுத்து இரண்டாம் பாகத்தின் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில் சூரி சிவகார்த்திகேயன் தயாரிப்பில் மற்றுமொரு புதிய படத்தில் ஒப்பந்தம் ஆனார்.

இதையும் படிங்க : பீஸ்ட் படம் சொதப்ப நெல்சன் காரணமே இல்லையாம்… விஜயை கவுக்க இப்படியா சதி பண்ணுவீங்க…

இந்த நிலையில் மீண்டும் சூரிக்கு இன்னொரு படத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. அந்தப் படத்தை லிங்குசாமிதான் இயக்குகிறாராம். ஆனால் வெற்றிமாறன் தயாரிக்கிறாராம். ஏற்கனவே லிங்குசாமி இயக்கத்தில் ஒரு சில படங்கள் தோல்வி அடைந்த நிலையில் சூரி கொஞ்சம் யோசிக்கலாம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Next Story