சமீபகாலமாக சினிமாவில் ஒரு பெரிய நடிகர் இருந்தால் அவர் நம்மை விட்டு மறைந்தால் அதை வெற்றிடம் என்பர். எம்ஜிஆர், சிவாஜியின் இடங்களை நிரப்ப யாரும் இல்லை. தற்போது ரஜினியின் சூப்பர்ஸ்டார் நாற்காலிக்குப் போட்டி, அதே போல நடிகர் விஜய் அரசியலுக்குப் போனால் அது காலியிடம்… அதற்கும் போட்டி என பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சினிமாவில் வெற்றிடமே இல்லை என சூரி சொல்லி இருக்கிறார். அவர் எதனால் அப்படி சொன்னார்னு பார்க்கலாமா…
காமெடியனாக புரோட்டா சூரியாக வந்து கலகலன்னு பல ஹீரோக்களுடன் இணைந்து காமெடி பண்ணியவர் திடீரென விடுதலை படத்தில் கதாநாயகன். இது எல்லோரையும் முதலில் ஆச்சரியப்படுத்தினாலும் அதன்பிறகு அவரது நடிப்புப் பேசப்பட்டது. தொடர்ந்து ஹீரோ வேடமாகவே வருகிறதாம். கருடன் படம் மே 31ல் ரிலீஸ் ஆகுது. அதற்கான பிரஸ்மீட்டில் சூரி செய்தியாளர்களை சந்தித்து இப்படி பேசினார்.
விடுதலை படத்தில் வேறு மாதிரியான சூரியைப் பார்த்துருப்பீங்க. இதுல இன்னொரு மாதிரியான சூரியைப் பார்ப்பீங்க. இப்போ எனக்கு காமெடி கேரக்டர்களுக்கான வாய்ப்பு வரவில்லை. ஹீரோவுக்கான பட வாய்ப்புகள் தான் வருகிறது. கருடன் படத்தில் சசிக்குமார் முக்கியமான ரோல் பண்ணுகிறார்.
சமுத்திரக்கனி, மைம் கோபி, ஸ்வேதா நாயர் உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா மியூசிக் பண்ணி இருக்கிறார். எமோஷனல் ஆக்ஷன் படம். சசிக்குமார் நடிக்கிறதால இந்தப் படத்துக்கு இன்னும் கூடுதல் புரொமோஷன் கிடைச்சிருக்கு. என் படத்துல அவரு நடிக்கிற மாதிரி இல்ல. அவரு படத்துல தான் நான் நடிக்கிற மாதிரி இருக்கு.
காமெடியனா நடிக்கும்போது நமக்குள்ள ரோல மட்டும் செலக்ட் பண்ணுவோம். கதை நாயகனா நடிக்கும்போது நிறைய பொறுப்புகள் இருக்குன்னு நினைக்கிறேன். வெற்றிமாறன் கொடுத்த அந்த இடத்தைத் தக்க வச்சிக்கணும். ரிலீஸ் ஆகற வரை எல்லாவற்றையும் கவனிக்க வேண்டிய சூழல் உள்ளது.
விடுதலை படத்தில் எல்லா புட்டேஜையும் வெற்றிமாறன்கிட்ட அசிஸ்டண்ட் டைரக்டரா ஒர்க் பண்ணியவர் துரை செந்தில்குமார் பார்த்துருக்காரு. என்னை எந்த இடத்துல வச்சிருக்கணும்கறது அவருக்குத் தெரியும். அவரு தான் இந்தப் படத்துக்கு டைரக்டர். சினிமாவுல வெற்றிடமே கிடையாது.
அந்தந்த இடத்துக்கான ஆள்கள் வந்துக்கிட்டே தான் இருப்பாங்க. எந்த இயக்குனர்கள் கூப்பிட்டாலும் நடிக்கத் தயாராகத் தான் இருக்கேன். புது இயக்குனர்கள் இன்று உலகம் முழுவதும் திரும்பிப் பார்க்க வைக்கிறாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில்…
மாநாடு படம்…
போடா போடி…
Viduthalai 2:…
விடுதலை 2…