எல்லாம் போச்சு..! சூட்டிங் போயிருந்தா கூட ஒஹோனு வாழ்க்கை..! விழிபிதுங்கி நிற்கும் சூரி..
தமிழ் சினிமாவில் காமெடி கிங்காக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சூரி.தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் “விடுதலை “ என்ற படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் ஏராளமான படங்களில் காமெடி நடிகராக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
இவர் அண்மையில் ஒரு பிரச்சினையில் மாட்டிக்கொண்டிருந்தார். அதாவது இவருக்கும் நடிகர் விஷ்ணுவிசாலுக்கும் இடையே ஒரு நிலப்பிரச்சினையில் 2.50 கோடி வரை ஏமாற்றிவிட்டார் என்று சூரி தரப்பிலிருந்து ஒரு மனு ஒன்றை போலீஸில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்ததில் கோர்ட்டில் 6 மாதங்களுக்குள் இந்த கேஸின் முழு விவரம் பற்றி விசாரனையை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதிலிருந்து நடிகர் சூரி போலீஸ் அழைக்கும் போதெல்லாம் சூட்டிங்கில் இருந்தாலும் அதை கேன்சல் பண்ணி விட்டுதான் சென்று வந்திருக்கிறார். இன்றைய நிலவரப்படி காமெடி நடிகர்களில் அதிக சம்பளம் வாங்குபவர்களில் சூரியும் ஒருவர். இதனிடையில் இவர் சூட்டிங் கேன்சல் பண்ணும் போதெல்லாம் சம்பளமும் வீணாகிறது.
இதனால் வேதனையில் சூரி இதுக்கு போலீஸ் பக்கம் போகாம நாமலே பேசி இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு கண்டிருக்கலாம். அந்த பக்கம் இரண்டரை கோடி இந்த பக்கம் சினிமா வாய்ப்புகள் பல என வருத்தப்படுவதாக சினிமா தரப்பிலிருந்து தெரிவிக்கின்றனர்.