விடுதலைக்கு முன்னாடி ரெண்டு கதைல என்ன நடிக்க விடாம பண்ணுனாரு.. – சூரியை பாடாய் படுத்திய வெற்றிமாறன்..!
தமிழ் திரையுலகில் ஆரம்பக்கட்டத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகர் சூரி. 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் இவர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் இவருக்கு பெரும் வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது.
அதன் பிறகு தொடர்ந்து பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளார் சூரி. சூர்யா, அஜித், ரஜினி என பல முக்கிய நட்சத்திரங்களின் திரைப்படங்களில் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வந்தார் சூரி. பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தாலும் வெகு காலமாக கதாநாயகனாக நடிப்பதற்கு முயற்சித்து வந்தார் சூரி.
இந்த நிலையில் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. முதல் முதலாக கதாநாயகனாக நடிக்கும் படமே வெற்றிமாறன் இயக்கத்தில் அமைந்துவிட்டதால் மகிழ்ச்சியில் உள்ளார் சூரி.
ட்ராப் ஆன ரெண்டு கதைகள்:
ஆனால் இந்த படம் துவங்குவதற்கு 5 வருடங்களுக்கு முன்பே சூரிக்கும், வெற்றிமாறனுக்குமிடையே இதுக்குறித்த பேச்சுவார்த்தைகள் இருந்து வந்துள்ளன. வெற்றிமாறன் முதன் முதலாக சூரிக்கு கதை கூறியப்போது காரைக்குடியில் நடக்கும் ஒரு சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதையை கூறினார்.
பின்னர் சிறிது நாட்கள் கழித்து அந்த கதையை படமாக எடுக்க வேண்டாம். வேறு ஒரு கதை என்னிடம் இருக்கிறது. துபாயில் நடக்கும் கதை என கூறியுள்ளார். பிறகு ஒரு இரண்டு வருடங்களுக்கு எந்த ஒரு தகவலும் அளிக்காமல் இருந்துள்ளார் வெற்றிமாறன்.
ஒரு வழியாக 2020 இல் துபாயில் படத்தை எடுக்கலாம் என முடிவு செய்து துபாய் கிளம்பியுள்ளனர். ஆனால் அப்போது கொரோனா வந்ததால் படப்பிடிப்பு ரத்தானது. அதன் பிறகு அந்த கதையும் வேண்டாம் என கூறிவிட்டார் வெற்றிமாறன்.
அதன் பிறகு இறுதியாக ஓ.கே ஆன கதைதான் விடுதலை. விடுதலை படம் தயாராவதற்கு முன்பு இவ்வளவு பிரச்சனைகளை அனுபவித்துள்ளார் நடிகர் சூரி.