நான் முதல்ல நடிக்கிறப்பவே இதுக்காக திட்டுனாரு! – சூரி குறித்து அப்போதே யூகித்த விஜய் சேதுபதி!
தொடர்ந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் ஒரு நடிகராக விஜய் சேதுபதி இருந்து வருகிறார். அவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. விக்ரம் திரைப்படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் மேலும் பிரபலமாகிவிட்டார் விஜய் சேதுபதி.
பல நடிகர், நடிகைகளுக்கு தொடர்ந்து ஊக்கத்தை கொடுத்து வந்தவர் விஜய் சேதுபதி. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வருவதற்கு ஒரு விதத்தில் விஜய் சேதுபதி காரணமாக இருந்தார். காக்கா முட்டை திரைப்படத்தில் அம்மாவாக நடிப்பதற்கு ஆள் தேர்ந்தெடுப்பு நடக்கும்போது விஜய் சேதுபதிதான் ஐஸ்வர்யா ராஜேஷிடம் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க சொன்னார்.
அந்த படம் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு முக்கியமான படமாக அமைந்தது. தற்சமயம் விடுதலை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார்.
இசை வெளியீட்டு விழாவில் இதுக்குறித்து சூரி பேசும்போது “நான் வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்து முடித்ததும், விஜய் சேதுபதியிடம் காமெடி நன்றாக இருக்கிறதா?” எனக் கேட்டுள்ளார். அப்போது விஜய் சேதுபதி ”நீ முதலில் உன்னை காமெடியன்னு முடிவு பண்ணிக்காத, காமெடி நல்லாதான் இருக்கு, ஆனா அதை தாண்டி நீ ஒரு கேரக்டர் ஆர்டிஸ்ட். உன்னால எந்த கேரக்டரையும் நல்லா பண்ண முடியும். அதுனால் அதற்கு முயற்சி செய்” என கூறியுள்ளார்.
அதே போல தற்சமயம் காமெடியனாக இல்லாமல் ஒரு முக்கிய கதாபாத்திரமாக விடுதலை படத்தில் நடித்துள்ளார். அதே படத்தில் விஜய் சேதுபதியும் அவரோடு நடித்துள்ளார்.