Categories: latest news

கருடன் மெயின் வில்லனே இவர்தானா!.. அடேங்கப்பா அந்த சீனையே ஸ்னீக் பீக்கா விட்டுட்டாங்களே!..

காலையிலிருந்து சோசியல் மீடியா முழுவதும் நடிகர் சூரியின் நடிப்பை பெரிதும் பாராட்டி வருகின்றனர். நகைச்சுவை நடிகர்கள் அந்தக் காலத்தில் இருந்தே ஹீரோவாக நடித்து வருகின்றனர். நாகேஷ் நடித்த பல படங்கள் வெற்றி அடைந்துள்ளன. கவுண்டமணி, வடிவேலு, சந்தானம், விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் ஹீரோவாக நடித்துள்ளார்.

அந்த வரிசையில் கடந்த ஆண்டு பரோட்டா சூரி வெற்றிமாறன் இயக்கிய விடுதலைப் படத்தில் ஹீரோவாக மாறினார். அடுத்ததாக வெற்றிமாறன் உதவி இயக்குனரான துரை செந்தில்குமார் இயக்கத்தில் இன்று வெளியான கருடன் திரைப்படமும் சூரிக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: மத்தவங்களுக்காக ஓடி ஓடி செய்றவரு! தம்பிக்காக செய்ய மாட்டாரா? லாரன்ஸ் கொடுத்த இன்பதிர்ச்சி

இந்நிலையில், அந்த படத்தின் முக்கியமான காட்சி ஸ்னீக் பீக்காக தற்போது வெளியாகியுள்ளது. சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் ஒன்றாக தொழில் நடத்தி வரும் நிலையில் அப்பத்தா வடிவுக்கரசி பராமரித்து வந்த கோயில் சொத்துக்களையும் பாதுகாத்து வருகின்றனர்.

திடீரென 130 சவரன் நகை போலியான நகை என்பதை கண்டறியும் சசிகுமார் கோயில் நிர்வாகியை போலீசாரிடம் ஒப்படைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அப்போது அங்கே வரும் உன்னி முகுந்தன் மாப்பிள்ளை ஒரு நிமிஷம் தனியா பேசணும் என அழைத்துச் சென்று அந்த நகைகளை எடுக்கச் சொன்னதே தான் என உண்மையை வெளிப்படையாக கூறுகிறார்.

இதையும் படிங்க: ஒரு ஹைப்பும் இல்லாத இந்தியன் 2?.. ஆடியோ லாஞ்சுக்கு அப்புறமாவது தேறுமா?.. விழி பிதுங்கிய லைகா!..

அவருக்கு பதிலாக வேறு ஒரு ஆளை காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கலாம் என்று சொல்லும் போது, கூடவே நிற்கும் சூரி அண்ணனுக்கு பதிலாக நான் செல்கிறேன் என்கிறார். சூரியை சசிகுமார் அதட்டிவிட்டு தப்பு செய்தது நீதான் நீயே போய் சரணடைந்து விடு உன்னை நான் ஜாமினில் எடுக்கிறேன் எனக் கூறும் முக்கியமான காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

உன்னி முகுந்தனின் விசுவாசியான சூரிக்கு உன்னி முகுந்தன் செய்யும் மோசடிகள் தெரிய வர அவர் எப்படி மாறுகிறார் என்பது தான் இந்தப் படத்தின் கதையாக உள்ளது.

இதையும் படிங்க: ப்ரேக் அப் ஆகி முழுசா ஒரு மாசம் கூட ஆகல.. அதுக்குள்ள ஸ்ருதியின் அடுத்த அட்ராசிட்டி! வைரலாகும் வீடியோ

Saranya M

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

9 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

10 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

11 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

12 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

18 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

19 hours ago