Soori: வாவ்.. என்ன மாதிரியான கெமிஸ்ட்ரி! ‘மாமன்’ பட போஸ்டரை வெளியிட்ட சூரி

by Rohini |   ( Updated:2025-04-14 05:50:28  )
soori
X

soori

Soori: விடுதலை படத்திற்கு பிறகு தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார் சூரி. அவருடைய நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அடுத்த திரைப்படம் மாமன். இந்த படத்தின் போஸ்டர் மற்றும் வெளியீட்டு தேதி தற்போது வெளியாகி இருக்கிறது.விடுதலை, கருடன், கொட்டுக்காளி ஆகிய படங்களை தொடர்ந்து விலங்கு படத்தின் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நாயகனாக நடிக்கிறார்.

இந்த படத்திற்கு மாமன் என பெயரிட்டுள்ளனர். இதை லார்க் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. படத்திற்கு பேஷம் அப்துல் வஹாப் இசை அமைக்கிறார். இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். குடும்பம் மற்றும் உறவுகளுக்கு இடையே நடைபெறும் சம்பவம் இதன் பின்னணியில் இந்த படம் உருவாகி இருக்கிறது. சமீபத்தில் தான் படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் படத்தின் போஸ்டர் மற்றும் வெளியீட்டு தேதியை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. வருகிற மே 16ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி இருக்கிறது. அதில் பைக்கில் சூரி அவர் பின்னாடி ராஜ்கிரண் அமர்ந்திருக்கும் மாதிரியான ஒரு போஸ்டரும் இன்னொரு போஸ்டரில் சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகிய இருவரும் ரொமான்டிக்காக உட்கார்ந்து மாதிரியான புகைப்படமும் வெளியாகி இருக்கிறது.

இதில் சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இருக்கும் போஸ்டர் தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை ஒரு காமெடியனாகவே பார்த்த சூரியை இந்த போஸ்டரின் மூலம் ஒரு ரொமாண்டிக் ஹீரோவாக பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைத்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு போஸ்டராக தான் இது ரசிகர்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகிறது.

Next Story