More
Categories: Cinema News latest news

ஜாவா சுந்தரை விட அசுர வளர்ச்சி!.. எப்படி இருந்த சூரி.. இப்போ எப்படி மாறிட்டாரு பாருங்க!..

ஒரே நாளில் எல்லாம் சூரி ஒபாமா ஆகவில்லை. ஆனால், ஜாவா சுந்தரை போல அசுர வளர்ச்சியை தமிழ் சினிமாவில் நடித்தே தனது ஒட்டுமொத்த திறமையை கொஞ்சம் கொஞ்சமாக வெளிக்காட்டி இன்று கதையின் நாயகனாக வளர்ந்து நிற்கிறார்.

எல்லா கோட்டையும் அழி என முதலில் இருந்து தனது காமெடியன் இமேஜை சுக்கு நூறாக உடைத்து விட்டு தற்போது நடிகனாக புதிய கோடுகளை போட்டு அதில் தனக்கென ஒரு கோட்டையையே கட்டி வருகிறார் நடிகர் சூரி.

Advertising
Advertising

இதையும் படிங்க: ராஷ்மிகான்னு நம்பி போனா இப்படி ஏமாத்திப்புட்டீங்களேடா!. ஆந்திராவில் அசிங்கப்பட்ட தனுஷ்…

வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் ஹீரோவாக வேண்டும் என அவர் முடிவு கட்டிய நிலையிலேயே முதல் பந்தில் மட்டுமல்ல ஒரு ஒவரின் 6 பந்துகளிலும் யுவராஜ் சிங் போல சிக்சர் விளாச போகிறார் என்பது தெரிந்து விட்டது.

விடுதலை படத்திற்கு கிடைத்த பாராட்டுக்கள் ஓய்வதற்கு முன்னாடியே கொட்டுக்காளி படம் சர்வதேச அரங்கில் பல பாராட்டுக்களை பெற்று வருகிறது. அடுத்து சூரி நடிப்பில் கருடன் படம் உருவாகி உள்ள நிலையில், நேற்று அந்த படத்தின் டைட்டில் க்ளிம்ப்ஸ் வெளியானது.

இதையும் படிங்க: காதல் கணவனை விவாகரத்து செய்கிறாரா நமீதா? எல்லாத்துக்கும் காரணம் அந்த தொழிலதிபர்

வெற்றிமாறன் கதையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்துள்ள படத்தில் சசி குமார், உன்னி முகுந்தன், பாரதி கண்ணம்மா ரோஷினி ஹரிப்ரியன் என பலர் நடித்துள்ளனர்.

நாய் விஸ்வாசமா இருக்கா இல்லை சொக்கன் சூரி விஸ்வாசமா இருக்கானா என்பது போல வெளியான அந்த டைட்டில் டீசரை பார்த்த ரசிகர்கள் காமெடி போலீஸ் அதிகாரியாக துரத்திக் கொண்டு ஓடிய சூரியின் டிரான்ஸ்ஃபர்மேஷனை பாருங்க என கருடன் படத்தின் காட்சியுடன் கம்பேர் செய்து போட்டு வைரலாக்கி வருகின்றனர்.

 

Published by
Saranya M

Recent Posts