Sorgavaasal: ஆர்.ஜே.பாலாஜியின் சொர்க்கவாசல் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம்…
Sorgavaasal: ஆர்.ஜே.பாலாஜியின் சொர்க்கவாசல் திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகும் இருக்கும் நிலையில் எப்படி இருக்கிறது என்பதற்கான ட்விட்டர் விமர்சனங்கள் வரத் தொடங்கி இருக்கிறது.
1999ம் ஆண்டு நடந்த உண்மை கதைதான் சொர்க்கவாசல் திரைப்படம். செய்யாத தப்புக்கு ஒருவன் சிறையில் தண்டனை அனுபவிக்கிறான். அங்கு என்ன நடப்பது என்பதை வைத்து சொர்க்கவாசல் சுழல்கிறது.
இதையும் படிங்க: லப்பர் பந்து பட நடிகை தட்டி தூக்கிய ஆர்.ஜே பாலாஜி.. அப்போ திரிஷா?.. இது என்ன டுவிஸ்ட்டு..!
பா ரஞ்சித்தின் உதவி இயக்குனரான சித்தார்த் தன்னுடைய முதல் படத்தினை இயக்கி இருக்கிறார். படத்தின் முதல் பாதி நன்றாக அமைந்துள்ளது. எல்லாரும் பார்க்கலாம். அதுபோல இரண்டாம் பகுதிதான் படத்திற்கு முக்கிய பங்காக அமைந்துள்ளது.
செல்வ ராகவன் மற்றும் ஆர்ஜே பாலாஜியின் நடிப்பு அபாரம். அனிருத் இப்படத்தில் ஒரு பாடல் பாடி இருப்பது மேலும் பிளஸாக அமைந்துள்ளது. காமெடி நடிகராக வலம் வந்த ஆர்.ஜே.பாலாஜி மாஸ் நடிகராக செம மாற்றம் காட்டி இருக்கிறார். எமோஷனல் காட்சிகளிலும் ஆக்ஷன் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதையும் படிங்க: பாலா கிருஷ்ணா படத்தை சுட்டா தளபதி 69 எடுக்குறீங்க?!.. அட போங்கப்பா!…