என்னய்யா 'அக்யூஸ்ட்' மாதிரி நிக்க வச்சுருக்கீங்க?!... லோகி, அனிருத் நிலைமைய பாருங்க!...
சொர்க்கவாசல் படத்தின் டிரைலர் லான்ச் நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ், அனிருத், ஆர்ஜே பாலாஜி ஆகியோர் அக்யூஸ்ட் போன்று நிற்கவைக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகின்றார் ஆர் ஜே பாலாஜி. வானொலியில் ஆர் ஜே வாக தனது பயணத்தை தொடங்கிய பாலாஜி தொடர்ந்து படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். பின்னர் எல்கேஜி என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக நடிக்க தொடங்கிய இவர் ரன் பேபி ரன், சிங்கப்பூர் சலூன் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தியிருக்கின்றார்.
இதையும் படிங்க: தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்துக்கு காரணமே நயன்தாரா தான்… பகிர் கிளப்பும் பிரபலம்..!
நடிகராக மட்டுமில்லாமல் மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலமாக இயக்குனராகவும் தன்னை நிரூபித்து இருக்கின்றார். அடுத்ததாக நடிகர் சூர்யாவை வைத்து சூர்யா 45 என்கின்ற திரைப்படத்தை இயக்க இருக்கின்றார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கின்றது.
இதற்கிடையில் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் சொர்க்கவாசல் என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இந்த திரைப்படத்தை ஸ்வைப் ரைட் நிறுவனம் தயாரித்து உள்ள நிலையில் கிறிஸ்டோ சேவியர் இசையமைத்திருக்கின்றார். இந்த திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜியுடன் இணைந்து செல்வராகவன், கருணாஸ் பாலாஜி, சக்திவேல் எழுத்தாளர், சோபா சக்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
மத்திய சிறைச்சாலையை மையமாக வைத்து 1999 இல் நடக்கும் கதையை படமாக இயக்கியிருக்கின்றார் இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத். உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி ஒரு சிறை கைதியாக நடித்திருக்கின்றார். இந்த திரைப்படம் வருகிற நவம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
படத்தின் ரிலீஸுக்கு இன்னும் சிறிது நாட்கள் உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கின்றது. இந்நிலையில் சொர்க்கவாசல் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் ஆர் ஜே பாலாஜி, அனிருத், லோகேஷ் கனகராஜ், இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத், செல்வராகவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.
இதையும் படிங்க: இந்த வயசுல உனக்கு எதுக்கு செல்லம் ஆன்மீகம்?… ரசிகர்களை கலங்கடித்த இளம் நடிகை!
இதில் சொர்க்கவாசல் படத்திற்கு வித்தியாசமான முறையில் ப்ரமோஷன் செய்ய வேண்டும் என்பதற்காக ஆளுக்கு ஒரு சிலேட்டை கையில் கொடுத்து அதில் அவரவர்களின் பெயர்கள் மற்றும் சொர்க்கவாசல் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை எழுதி நிற்க வைத்திருக்கிறார்கள். போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் அக்யூஸ்ட் போல் ஒவ்வொருவரையும் ஸ்லேட்டை கொடுத்து நிற்க வைத்திருக்கிறார்கள். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.